சுமக்க வேண்டிய சுமைகளும் பகிர்ந்து கொள்ள வேண்டிய சுமைகளும்.
சுமக்க வேண்டிய சுமைகளும் பகிர்ந்து கொள்ள வேண்டிய சுமைகளும்.
பழைய ஏற்பாட்டில் தேவன் லேவி கோத்திரத்தை ஆசரிப்பு கூடார பணிகளுக்காக தெரிந்தெடுத்தார்.
லேவியினுடைய மூன்று பிள்ளைகளின் வம்சங்களுக்கு மூன்று விதமான பணிகளை தேவன் அமைத்துக் கொடுத்தார்.
கோகாத்தியர் மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள பொருட்களை பராமரிக்க வேண்டும்.
கெர்சோனியர் பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள திரைகள் கூடாரம் மூடுதுறை இவைகளை பராமரிக்க வேண்டும்.
அதேபோல் மெராரியர் ஆசிரிப்புக் கூடாரத்தின் சட்டப் பலகைகள் குறுக்குச் சட்டங்கள் அதன் கம்புகள் அடித்தளங்கள் கூடார ஆப்புகள் கயிறுகள் இவற்றை பராமரிக்க வேண்டும்.
எந்தெந்த வம்சத்திற்கு எந்தெந்த வேலைகள் கொடுக்கப்பட்டதோ அவர்கள் அந்தப் பணிகள் சம்பந்தமான பொருள்களை சுமக்க வேண்டும்.
உதாரணமாக
கோகாத்தியர் மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள பொருட்களை சுமக்க வேண்டும்.எண்ணா 4:15
கெர்சோனியர் பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள திரைகள் கூடாரம் மூடுதுறை இவைகளை சுமக்க வேண்டும்.எண் 4:26
மெராரியர் ஆசிரிப்புக் கூடாரத்தின் சட்டப் பலகைகள் குறுக்குச் சட்டங்கள் அதன் கம்புகள் அடித்தளங்கள் கூடார ஆப்புகள் கயிறுகள் இவற்றை சுமக்க வேண்டும்.
எண்ணா 4:32
அதே வேளையில் ஆசரிப்பு கூடாரம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தப்படும் பொழுது
இன்னொரு கருத்தையும் கவனிக்க வேண்டும்.
மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள பொருட்களை கோகாத்தியர்
தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும். அவைகளை தொடக்கூடாது.அதை வாகனங்களில் ஏற்றக்கூடாது.
ஆனால்
மெராரியர், கெர்சோனியர் ஆகியோர் தங்களுக்கு ஒப்புகொடுக்கப்பட்ட பணிகளுடைய பொருள்களை வாகனங்களில் ஏற்ற வேண்டும். அதைனை தங்கள் தோளில் சுமக்கத் தேவையில்லை.
இதன் மூலம் நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் .
ஒன்று நாம் செய்ய வேண்டிய ஊழியங்களும் உண்டு.
அதன் மூலம் நாம் சுமக்க வேண்டிய பாரங்களும் சுமைகளும் உண்டு.
சில பாரங்களை மற்றவர்ளோடுநாம் பகிர்ந்து கொள்ளலாம்.
அதே வேளையில்
சில ஊழியத்தின் பாரங்களை நாம் மட்டுமே சுமந்தாக வேண்டும்.
இது ஊழியம் செய்யும் எல்லோருக்கும் பொருந்தும்.
அது விசுவாசியாக இருந்தாலும், சரி முழு நேரப்பணியாளராக இருந்தாலும் சரி.
நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் சுமக்க வேண்டிய சுமைகளும் உண்டு. பகிர்ந்து கொள்ள வேண்டிய பாரங்களும் உண்டு.
There are some burdens we can share Gal 6:2 ,but there are some burdens that only we can bear.W.W.Wiersbe