ஊழியத்தில் எல்லோரும் தேவை
ஆசரிப்பு கூடாரப் பணிகளுக்கு தேவன் ஆரோன் குடும்பத்தாரையும் ,லேவி கோத்திரத்தையும் தெரிந்தெடுத்தார்.
ஆரோன் குடும்பத்தாரை மதகுருக்களாகவும்,(ஆசாரியர்களாக) லேவி கோத்திரத்தை மதகுருக்களுக்கு உதவியாகவும் நியமித்தார்.
தேவன் முதலில் இஸ்ரவேல் ஜனத்தில் பிறக்கும் எல்லா முதல் ஆண் குழந்தைகளையும் தனக்கு சொந்தமாக தெரிந்தெடுத்தார்.
பிறகு லேவி குடும்பத்தாரை அதற்கு பதிலாக தன்னுடைய சொந்தமாக தெரிந்தெடுத்தார்.
இந்த லேவி கோத்திரத்தில் ஆரோன் குடும்பத்தாரை மதகுருக்களாக அதாவது ஆசாரியர்களாக பிரித்து எடுத்தார்.
லேவி கோத்திரத்தில் உள்ள மற்றவர்களை ஆரோன்குடும்பத்தாருக்கு உதவியாக நியமித்தார்.
எனவே எல்லா லேவியர்களும் ஆசாரியர்கள் அல்ல.
ஆனால் எல்லா ஆசாரியர்களும் லேவியர்களே.
இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள பணிகளுக்கு லேவியர்களும் தேவை. மதகுருக்களும் தேவை.
மதகுருக்கள் பலிபீடத்தில் உள்ள பணிகளுக்கும் ,மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம் ,பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள பணிகளுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
லேவியர்கள் ஆசாரியர்களுக்கு உதவியாகவும் ஆசரிப்பு கூடாரத்தில் உள்ள ஏனைய பணிகளையும் செய்து வந்தார்கள்.
. லேவியர்களும் மத குருக்களை போலவே
தேவனால் தெரிந்து கொள்ள பட்டவர்கள்.
இவர்களும் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். தேவனுக்கு உரியவர்கள். இவர்களும் ஊழியத்திற்கென்று பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்.
இன்னொரு வார்த்தை சொல்லப் போனால் இவர்களை "dedicated laity"என்றும் சொல்லலாம்.
இவர்கள் மதகுருக்களை விட தாழ்ந்தவர்களும் அல்ல. மத குருக்கள் இவர்களை விட உயர்ந்தவர்களும் அல்ல.
இவர்கள் அனைவரும் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள்
இதே போல தான் புதிய ஏற்பாட்டில் மறுபடியும் பிறந்த அனைவரும் தேவனால் தெரிந்து கொள்ள பட்டவர்கள். பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் ஊழியத்திற்கு என்று அழைக்கப்பட்டவர்கள். விசுவாசிகள், ஊழியக்காரர்கள் என்ற பிரிவினை புதிய ஏற்பாட்டின் பார்வையில் சரியில்லை
என்று சொல்லப்பட்டாலும்
ஊழியத்தில் தலைவர்களும் தேவை அவர்களுக்கு உறுதுணையாய் இருக்க விசுவாசிகளும் தேவை.
ஆனால் இவர்கள் ஒருவரை ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் மேன்மையானவர்களும் அல்ல . தாழ்மையானவனவர்களும்
அல்ல
அவனவனுக்குரிய வெகுமதி, பரிசு அவனவன் செய்கின்ற வேலையில் காணப்படும் தியாகம் ,பரிசுத்தம் ,உண்மை இவைகளின் அடிப்படையிலேயே இருக்குமே தவிர ஊழியத்தினுடைய தன்மையை பொறுத்து அல்ல.
பழைய பாட்டு காலத்தில் லேவிலயர்களை dedicated laity என்று அழைப்பது போல இன்றைக்கு விசுவாசிகளையும் dedicated priest and laity என்றும் அழைக்கலாம்.
சபையின் வளர்ச்சிக்கு இவர்கள் இருவருமே தேவை இருவரும் ஒருவரை சார்ந்து ஒருவர் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சபை என்பது ஒரு குடும்பம், அது ஒரு சரீரம். இந்த உபதேசம் வலியுறுத்தி அதிகமாக போதிக்கப்படுவதில்லை.
படிக்க,-எண்ணாகமம் எட்டாவது அதிகாரம்.
கர்த்தர் மகிமைப்படுவராக