Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

எழுப்புதல் விசுவாசிகள் மத்தியில் தான் முதலில் ஆரம்பிக்கும்

A revival almost always begins among the laity.
The ecclesiastical leaders seldom welcome reformation. History repeats itself.

The present leaders are too comfortably situated as a rule to desire innovation that might require sacrifice on their part
- Frank Bartleman
நான் அறிந்த வரையில் இந்த சத்தியத்தை உணர்ந்த முழு நேர ஊழியர்கள் வெகு சிலரே.

இப்படிப்பட்ட சிந்தனை உள்ள தலைவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
எனவே உண்மையான எழுப்புதல் என்பது முழு நேர பணியாளர்கள் அல்லாதவர்கள் மத்தியிலிருந்து தான் எழும்ப வேண்டும்.

அதுதான் நடக்கும்.

புதிய ஏற்பாட்டு சத்தியத்தின் படி விசுவாசிகளுக்குரிய இடத்தை தலைவர்கள் கொடுக்காத வரையில், அவர்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்காதவரையில், அவர்களை தலைவர்கள்  உத்தமத்தோடு பயன்படுத்தாத வரையில், அவர்களை ஊழியத்தில் உடன் பங்காளிகளாக உண்மையாக ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்களும் இணைந்து தான் தேவனுடைய ராஜ்யத்தை கட்ட முடியும் என்று நினைக்காத வரையில், அவர்களுக்காகத்தான் முழுநேர பணியாளர்களான தங்களை கடவுள் நியமித்திருக்கிறார் என்கிற சிந்தனை வராத வரையில் எழுப்புதல் என்பது சபையில் கானல் நீர்தான்.

தேவனுடைய சபையின் வளர்ச்சிக்கு தலைவர்கள் எவ்வளவு அவசியமோ அதை போல் விசுவாசிகளும் அவசியம் என்கிற சிந்தனை வேதத்தின் படி சரியானது. எந்த சபை விசுவாசிகளை ஊழியத்திற்கும், பக்தி விருத்திக்கும் சரியாக பயன்படுத்துகிறதோ அதுவே வேதத்தின் படி அங்கீகரிக்கப்பட்ட சபை.

திருவெளிப்பாடு 2:6 ல் சொல்லப்பட்ட
நிக்கொலாயரின் செயல்கள் போதகர் மத்தியில் ஆழமாக பதிந்துள்ள காரணத்தினால்தான் எழுப்புதல் என்பது நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் காணப்பட முடியவில்லை.
முதல் மூன்று நூற்றாண்டுகள் வரை ஊழியர்கள், விசுவாசிகள் (Clergy  and Laity)என்கிற பாகுபாடு இல்லாத வரைக்கும் சபை வேகமாக வளர்ந்தது என்பதை சபை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.