விசுவாசிகள் மற்ற விசுவாசிகளுக்கு போதிக்கலாமா?
உங்கள் சிந்தனைக்கு :
விசுவாசிகள் மற்ற விசுவாசிகளுக்கு போதிக்கலாமா?
Whether a believer can teach the Scripture
அப்போஸ்தலர் 18:1–5, 24 –28 ஆகிய வசனங்கள்.
விசுவாசிகளும் உபதேசத்தில் குழப்பத்தில் இருப்பவர்களை சரிசெய்யலாம் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.
இதற்கான சிறந்த உதாரணம் ஆக்கில்லா – பிரிஸ்கில்லாள்.
அப்பொல்லோ, அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தவன்;
வேதத்தில் வல்லவனாகவும்,
ஆவியில் உற்சாகமாகவும் இருந்தான்.
அவன் போதித்தது தவறானதோ அல்லது பொய்யானதோ அல்ல.
ஆனால் அவன் யோவானின் திருமுழுக்கு வரை மட்டுமே அறிந்திருந்தான் (அப்போ. *18:25).
அவனுடைய பிரசங்கத்தை கேட்ட ஆக்கில்லா – பிரிஸ்கில்லாள்,
அவனை பொது இடத்தில் அவமதிக்காமல்,
தனிப்பட்ட முறையில் அழைத்து,
தேவனுடைய வழியை இன்னும் துல்லியமாக அவனுக்கு விளக்கினார்கள்.
(அப்போ. 18:26).
இந்தத் திருத்தத்தை செய்தவர்கள்:
அப்போஸ்தலர்கள் அல்ல சபை மூப்பர்கள் அல்ல
தீர்க்கதரிசிகளும் அல்ல. அவர்கள் தங்கள் வாணிபத்தை கவனித்துக் கொண்டே
தேவ ஊழியம் செய்த சாதாரண விசுவாசிகள்.
அவர்கள் பவுலுக்கு உறுதுணையாக இருந்தவர்கள். (ரோமர் 16:3–4)
தங்கள் வீட்டில் சபையை நடத்தினவர்கள்
( 1 கொரி. 16:19)
எபேசுவில் ஊழியத்தில் பவுலுக்கு உதவியவர்கள்.
அவர்கள் ஆவிக்குரிய பார்வையோடும், தாழ்மையோடும் செயல்பட்டதால்,
அப்பொல்லோ ஆகயாவில் மிக வல்லமையுள்ள தேவ ஊழியக்காரனாக மாறினான்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் முக்கிய பாடம்:
? விசுவாசிகளும் மற்ற விசுவாசிகளுக்கு போதிக்கலாம்.
“சபையின் போதகர் மட்டும் தான் போதிக்க வேண்டும்”
என்ற கட்டாயம் வேதத்தில் இல்லை.
ஆனால் அதே நேரத்தில்,
போதகர்கள் விசுவாசிகளை ஊழியத்திற்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு உடையவர்கள்.
(எபேசியர் 4:11–12).
கிரமமான வேத வாசிப்பு,
அடிப்படையான கிறிஸ்தவ சத்தியங்கள்,
வேதத்தின் அதிகாரத்திற்குள் இருக்கும் சரியான வியாக்கியானங்கள்
இவற்றின் மூலம் ஒரு விசுவாசி
தேவனுடைய வார்த்தையில் வளர முடியும்.
இந்தத் தகுதிகளோடு,
போதிக்கக் கூடிய கிருபை பெற்ற எந்த விசுவாசியும்,
குழப்பத்தில் இருப்பவர்களை
வசனத்தின் அடிப்படையில்
உண்மையான சத்தியத்துக்குள் கொண்டு வரலாம்.
இதை சபை போதகர்கள் பயப்படாமல், உற்சாகப்படுத்த வேண்டும்.
விசுவாசிகளை வளர விடாமல் கட்டுப்படுத்துவது
மேய்ப்புத் தன்மை அல்ல.
வளரச் செய்யும் போதகனே மெய்யான மேய்ப்பன்.
எசக்கியேல் சண்முகவேல்