பின்மாற்றமும், மறுதலிப்பும் (Fall and Falling away)
உங்கள் சிந்தனைக்கு :
பின்மாற்றமும், மறுதலிப்பும் (Fall and Falling away)
இவை இரண்டும் ஒன்றல்ல.
முற்றிலும் மாறுபட்டது எந்த ஒரு விசுவாசிக்கும் பின்மாற்றம் என்ற நிலை வரலாம்.ஆனால் அவன் மனம் திரும்பும் போது அவன் மறுபடியும் தேவனோடு ஒப்புரவாகிவிடுகிறான். உண்மையாகவே மறுபிறப்பின் அனுபவத்தை பெற்ற மனிதன் ஒருபோதும் ஆண்டவரை மறுதலிக்க மாட்டான். ஆவியானவரால் மறுபிறப்பின் அனுபவம் இல்லாதபோலிகள்தான் ஆண்டவரை மறுதலிக்கும் நிலைக்கு தள்ளப் படுவார்கள்.
*ஒரு ஆத்துமா கர்த்தரை விட்டு பின் வாங்கும் போது அந்த* *ஆத்துமாவுக்கும் ஆண்டவருக்கும் உள்ள ஐக்கியம் தான் துண்டிக்க படுகிறது* .
*ஆனால் ஒருவன் ஆண்டவரை மறுதலிக்கும் போதோ அவரோடு உள்ள உறவே* *துண்டிக்கப்படுகிறது.* *இதுதான்* *வித்தியாசம்*.
மறுதலித்தவன் பாவங்களுக்காக வருத்தப்பட்டாலும் மெய்யன மனம்திரும்புதலுக்கு வராத காரணத்தினால் துண்டிக்கப்பட்ட உறவை புதுப்பிப்பது இயலாத காரியம்.
பேதுரு தவறுக்காக மனம் திருப்பினான், மறுபடியும் தேவனோடு ஐக்கியப்பட்டான்.
ஆனால் யூதாஸ்காரியோத்து நிலமை அப்படி அல்ல.
ஆரம்பம் முதலே அவன் தேவனோடு உள்ள உறவில் இல்லை
யோவான் 6:70, 13:10-11 மத்தேயு 27:3,2 அபோஸ் 1:25 ஆகியவற்றை கவனமாக படிக்கவும்.
Peter was a backslider, but Judas was an apostate .
An apostate is the one who wilfully repudiate the savior for which there is no repentance.
Who is apostate?
எபிஇ6:1-6
மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
எபிரெயர் 6:6
Who is apostate?
வேதப் பண்டிதர்கள் மத்தியில் . இரண்டு வகையான கருத்துக்கள் உண்டு.ஒன்று
இரட்சிப்பு இழப்பதற்கு வாய்ப்புகள் உண்டு சொல்லக்கூடிய கருத்து.
அடுத்தது இரட்சிப்பை பெற்று விட்டால் அந்த இரட்சிப்பு நிரந்தரமானது அதை இழக்க முடியாது.
எபி 6:1-6 வரையில் சொல்லப்பட்ட வசனங்கள் இரட்சிப்பு இழப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்று சொல்பவர்களுக்கு ஆதாரமாக உள்ளது. இந்தப் பகுதி வேத அறிஞர்களால் பலவிதமான விவாதத்திற்குள் உட்பட்ட பகுதி.
This is one of the most terrible passages in scripture.Barclay
இந்தப் பகுதியில் பல்வேறு கோணங்களில் வித்தியாசமாக விவாதிக்கப்பட்டாலும் வசனங்களை கூர்ந்து கவனிக்கையில் இது இரட்சிக்கப்பட்டவர்களை குறித்து சொல்லப்பட்ட வார்த்தையை தவிர யூத மதத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர்களுக்கோ பெயரளவில் கடவுளை ஏற்றுக்கொண்ட மனம் திரும்பாத கிறிஸ்தவர்களுக்கோ சொல்லப்பட்ட வார்த்தை அல்ல.
இங்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் பார்க்கும் பொழுது அதாவது
ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
எபிரேயர் 6:4
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தவர்கள்
எபிரேயர் 6:5
மறுதலக்கும் போது அவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
எபிரேயர் 6:6
இப்படிப்பட்டவர்கள் இரட்சிப்பை இழக்கக்கூடும்.
இரட்சிப்பை இழப்பவர்கள் ஒரே நாளில் அந்த நிலைக்கு வருவதில்லை பல நிலைகளைக் கடந்து இறுதியாகத்தான் அவர்கள் கடவுளை நிராகரிப்பார்கள் அந்த நிலைகளை குறித்து இப்பொழுது பார்க்கலாம்
மறுதலிப்பின் நான்கு நிலைகள்
1. பின்னோக்கி திரும்புதல். A looking back
ஆண்டவரை விட்டு விலகி உலகத்தை நோக்கி பின்னிட்டுப் பார்த்தல் . லூக் 9;62
அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
லூக்கா 9:62
2 இயேசுவின் மீது உள்ளே ஆழ்ந்த அன்பின் கவர்ச்சியை விட்டு
விசுவாசத்தை விட்டு பின்வாங்கிப்போதல் எபி 10:38ட
A drawing back
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
எபிரேயர் 10:38.
Now the just shall live by faith: but if any man draw back, my soul shall have no pleasure in him.ESV
3,தெய்வ பக்திக்குரிய குறுகிய வழியை தெரிந்துகொள்ளாமல் சாத்தானின் பரந்த வழியை தெரிந்துகொண்டு பின்வாங்கி போதல் யோவா
A turning back
அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள்.
யோவான் 6:66 From that time many of his disciples went back, and walked no more with him.kjv
4, இறுதியில் மறுதலித்தல் ஏசா 28:13 A falling back