Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Daily Quote for Study

*கடவுளின்* *இறையாண்மையும் நமது* *பொறுப்பும் .
*உங்கள் சிந்தனைக்கு:*

*கடவுளின்**இறையாண்மையும் நமது* *பொறுப்பும் .*

இவைகள் இரண்டும் நம்முடைய ஆவிக்குரிய பாதுகாப்பின் இரண்டு அம்சங்களாகும்.

கடவுள் இறையாண்மை உடையவர், அதே வேளையில் மனிதன் பொறுப்புள்ள உயிரினம்.
இந்த இரண்டிற்கும் இடையில் சத்தியத்தின் சமநிலை பாதுகாக்கப்படுவதால் மட்டுமே நாம் உபதேச பிழையிலிருந்து விடுவிக்கப்பட முடியும்.

ஒரு முறை இரட்சிக்கப்பட்டால் நித்திய பாதுகாப்பு( once saved always saved ) என்பது வேதத்தின் படியான கருத்து அல்ல.

இது ஒரு போலியான பாதுகாப்பை விசுவாசிக்கு கொடுத்துவிடும்.
It gives a false security to the believers.

விசுவாசி இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்பட வேண்டும். கிரியை செய்ய வேண்டும். இதற்கு வேதத்தில் பல உதாரணங்கள் உண்டு.

தேவனுடைய இறையாண்மையும் மனிதனுடைய பொறுப்பும் இணைந்து செயல்பட்டால்தான் நம்முடைய இரட்சிப்பு பூரணம் அடைய முடியும்.
.
இது இயேசு கிறிஸ்துவின் வார்த்தை.
“முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” மத்தேயு. 24:13

முதல் யூதரல்லாத சபைக்கு பர்னபா கொடுத்த ஆலோசனை என்னவென்றால்

"சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்." *அப்போ. 11:23*
நிலைத்திருக்கும்படி புத்தி சொன்னான்’ என்கிற வார்த்தையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பல சபைகளிலிருந்து இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுக்குப் பவுல் கூறிய ஆலோசனை,
“ நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்.”

இது பிலிப்பி பட்டணத்து சபைக்குப் பவுலின் ஆலோசனை.

''ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்". *பிலி2:12*

எனவே இரட்சிப்பில் தேவனுடைய பகுதி மட்டுமல்ல, நம்முடைய பங்களிப்பும் இரட்சிப்பு நிறைவேறுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

நம்முடைய முயற்சிக்கு வேண்டிய கிருபைகளை தேவன் அளிப்பார். எனவே நம்முடைய பங்களிப்பும், செயல்பாடும், தீர்மானங்களும், விருப்பங்களும் இல்லாமல் நம்முடைய இரட்சிப்பு நிறைவேற முடியாது.

அது ஒரு தேக்க நிலையில் கொண்டு வந்துவிடும்.
ஒரு தவறான பாதுகாப்பு நமக்கு அளித்து இறுதியில் நம்மை ஏமாற்றி விடும்.

எனவே நம்முடைய பகுதியை நாம் செய்ய வேண்டும். தேவனுடைய பகுதியை அவர் செய்வார்.

இறுதியாக எபிரேய நிருபத்தை எழுதியவரின் வார்த்தைகளைப் பார்க்கலாம்.
'‘நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்’'. *எபி 3;14*

God's Sovereignty and human responsibility are the two sides of Christian security.
God is sovereign, and the man is responsible creature: and it is only as the balance of truth is preserved between these two that we are

delivered from error ARTHUR W.PINK