Don't reclassify the sins that God had already classified" – W.W. Wiersbe
உங்கள் சிந்தனைக்கு:
"Don't reclassify the sins that God had already classified" – W.W. Wiersbe
லேவியராகமம் புத்தகத்தில் அசுத்தமானது (unclean) என்று 32 முறை, அருவருப்பு (abomination) என்று 10 முறை வருகிறது. கர்த்தர் எதை எல்லாம் அசுத்தமானது என்று வரையறுத்தாரோ, அவை அனைத்தும் கடவுளின் பார்வையில் அருவருப்பானவை.
இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நம்முடைய மனோபாவம் என்னவென்றால், கர்த்தர் பாவம் என்று வரையறுத்த காரியங்களை நாம் மறுவகைப்படுத்துகிறோம் –
we reclassify the sins that God had already classified.
பாவங்களைப் பொறுத்த வரை, பெரிய பாவம், சிறிய பாவம் என்று ஒன்றும் கிடையாது. பாவம் என்றால் பாவம்தான்.
“மரணத்திற்கு ஏதுவான பாவம், மரணத்திற்கு ஏதுவில்லாத பாவம்” என்கிற வேறு வகை இங்குப் பொருந்தாது.
நாமே பாவங்களை வரையறுத்து, “இவை பாவமல்ல”, “இவை சிறிய பாவங்கள்”, “இவை பெரிய பாவங்கள்” என்று கர்த்தர் வகைப்படுத்திய பாவங்களை மறுவகைப்படுத்துவது நம்மை ஒருபோதும் பரிசுத்தத்திற்கே நேராக வழிநடத்தாது.
இஸ்ரவேலின் முதல் ராஜா சவுல் செய்த பெரிய பாவம் இதுதான்.
கர்த்தர் சவுலிடம்:
“இப்பொழுதும் நீ போய், அமலேக்கை மடுத்தடித்து, அவனுக்குண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய்.”
(1 சாமுவேல் 15:3)
ஆனால் சவுலோ:
“ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும் அழித்துபோட மனது இல்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளையும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துபோட்டான்.”
(1 சாமுவேல் 15:9)
அதற்குப் பிறகு அவன் சொன்ன சாக்குபோக்கு
:
“நலமானவற்றை தேவனுக்கே பலியிடுவதற்காகத் தப்பவைத்தேன்.
”
இது நமக்கு ஒரு முக்கியமான பாடம். தேவன் எதை அருவருப்பு என்று சொன்னாரோ, அதையே நாமும் அருவருப்பாகக் கருதி வெறுக்க வேண்டும். பாவத்தை மறுவகைப்படுத்தி, அதன் தன்மையை மென்மைப்படுத்தக் கூடாது.
நாமாகவே பாவத்தை மறுவகைப்படுத்துவது, கீழ்ப்படியாமைக்கே நேராக நம்மை இட்டுச் செல்லும். இந்த மனோநிலை நம்முடைய பரிசுத்த வாழ்க்கைக்கு மிகப்பெரிய தடை.
நாம் பரிசுத்த வாழ்வில் முன்னேற, தேவன் பாவத்தை எப்படி வகைப்படுத்தியிருப்பாரோ, அதில் எந்த மாற்றமும் இல்லாமல் கீழ்ப்படிதல் நம்முடைய கடமையாகும். உலக பார்வைக்கேற்ப பாவங்களை மதிப்பிட்டு வகைப்படுத்தக் கூடாது.
எசேக்கியேல் சண்முகவேல்