Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

ஆரோன் தண்டிக்கப்படாதது ஏன்?
உங்கள் சிந்தனைக்கு:


ஆரோன் தண்டிக்கப்படாதது ஏன்?

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டு வர தேவன் பயன்படுத்திய நபர்கள் மூன்று பேர் .
ஆரோன் ,மிரியாம் மற்றும் மோசே ஆகிய இவர்களே


இந்த மிரியாம் மோசேயை பார்வோனுடைய அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவள்.
இவள் தீர்க்கதரிசியாக காணப்பட்டாள்.

பார்வோனோடு பேசுகின்ற எல்லா சூழ்நிலைகளிலும் மோசேயின்  வாயாக திகழ்ந்தவன் ஆரோன்.
பின்னால் இவன் பிரதான மத குருவாக தெரிந்தெடுக்கப்பட்டான்.
இப்படி தேவனால் பயன்படுத்தப்பட்ட குடும்பத்தில் பொறாமை என்கிற காரியம் புகுந்து தேவனை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியது.

இதைப் பற்றிய சம்பவம் எண்ணாகமம் புத்தகம் 12 வது அதிகாரத்தில் காணப்படுகிறது.

இவர்கள் மோசே மீது  சுமத்திய குற்றச்சாட்டை மேலோட்டமாக பார்க்கும் பொழுது அது சரியாக இருந்தாலும்,அது தவறு என்று சற்று ஆராய்ந்து பார்த்தால்
தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் பிரச்சனை அதுவல்ல‌.

ஆரோனும், மிரியாமும் பொறாமையின் அடிப்படையிலேயே மோசேக்கு விரோதமாக எழும்பினார்கள் என்பதுதான் நாம்  தெரிந்து கொள்ளக்கூடிய காரியம்.
அவர்கள் சொன்ன வார்த்தையை பாருங்கள்
"கர்த்தர் மோசேயைக் கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்."
எண்ணாகமம் 12:2

சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு அழைத்தார்.

"நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன" என்று சொல்லி அவர்களை கண்டித்தார்.
கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது. விளைவு
மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள். இந்த கலகத்தில்ஆரோன் தண்டிக்கப்படவில்லை.
என்னதான்  இந்த கலகத்திற்கு மிரியாம் முக்கிய காரணமாக இருந்தாலும் இந்த  கலகத்திற்குஆரோனும் பொறுப்பாளிதான்

அவன் சொன்னதை பார்ப்போம்
“ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.”

இங்கு அவன் "நாங்கள்" என்று சொன்ன வார்த்தையை கவனிக்கவும்.

அவன் தண்டிக்கப்படாததற்கு காரணம்
அவன் வகித்த பொறுப்பு அல்லது உழியம் என்று பல வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

His position might have saved him from the humiliation that Miriam had to go through-. Believer's Bible commentary

மிரியாமை போல
குஷ்டரோகியாக மாறியிருந்தால் அவனுடய குருத்துவபணி பாதிக்கப்பட்டிருக்கும்.

அது இஸ்ரவேல் மக்களுக்கு மிகப்பெரிய இடறலாக மாறி இருக்கும்.

அதை தேவன் விரும்பவில்லை.
இன்றைக்கும் நம்மில்  பலரை தேவன் கண்டிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் .
நாம் வகிக்கிற ஊழியம், ஒரு வேளை இந்த பாதுகாப்பை அளிக்கலாம்.
நம்மை தண்டிப்பதின் மூலம் அவமானத்திற்கு
உட்படுத்துவதன் மூலமாக நாம் செய்கின்ற ஒரு சில ஊழியங்கள் சில வேளை பாதிக்கப்படும் என்பதற்காக நமக்கு அளிக்கப்படும் தண்டனைகளை தவிர்த்து இருக்கலாம்.
அதனால் நாம் பெருமை அடையக் கூடாது.
என்னதான் ஆரோன் குருத்துவ பணி செய்து தன் ஜனங்களுக்காக மன்றாட்டு ஜெபம் செய்தாலும், மக்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசும் ஊழியத்தைப் பெற்றாலும் அவன் இறுதியாக மோசேயிடம்  தனக்காக இறைவனிடம் மன்றாடும் படி கேட்டுக் கொண்ட‌ காரியம் தேவன் கொடுத்த தண்டனையாக எடுத்துக் கொள்ளலாம்.