தேவனுடைய வார்த்தையை சந்தேகப்படுவது அவிசுவாசத்தின் முதல் படி..
உங்கள் சிந்தனைக்கு:
தேவனுடைய வார்த்தையை சந்தேகப்படுவது அவிசுவாசத்தின் முதல் படி..
Unbelief is serious because it challenges the character of God and rebels against the will of God.W W.Wiersbe அவிசுவாசமென்பது மிகவும் ஆபத்தானது.
ஏனென்றால் அது தேவனுடைய குணாதிசயங்களுக்கு சவால் விடுகிறது.
அது தேவனுடைய சித்தத்தை நாம் செய்யவிடாமல் தடுத்துவிடும்.
கடவுள் தம்மைத் தேடுகிறவர்களுக்கு உண்மை உள்ளவராக இருக்கிறார் என்பது தேவனுடைய அடிப்படை குணங்களில் ஒன்று.
God is faithful
தம்மை நம்புகிற மக்களை அவர் கைவிடுவதில்லை என்பது அதனுடைய விளக்கம்.
ஆனால் அவிசுவாசம் என்பது தேவனுடைய குணாதிசயத்திற்கு சவால் விடுகிறது. நாம் பிரச்சனைகளை சந்திக்கும் போதும், நெருக்கடிகளை சந்திக்கும் போதும், ஆபத்துகளை எதிர்நோக்கி இருக்கும்போதும், எல்லோராலும் கைவிட்ட நிலையில் இருக்கும் போதும் இறைவன் நம்மை கைவிட்டு விட்டார் என்று நமக்கு எதிராளியான சாத்தான் சொல்லுவான்.
இதற்கு மேல் முன்னேற்றம் இல்லை என்று சொல்லுவான்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை இத்தோடு முடிந்து விட்டது என்று பயமுறுத்துவான்.
ஆனால் நாம் தேவன் உண்மையுள்ளவர் என்கிற அந்த அடிப்படை பண்பை, குணாதிசயத்தை உறுதியாக நம்பும்போது நம்மில் அவிசுவாசம் ஒருபோதும் தோன்றாது.
இஸ்ரவேல் ஜனங்கள் 6,03,548 பேர் மடிந்தது இந்த அவிசுவாசத்தினால்தான்.
தேவன் நம்மை கானானுக்கு அழைத்துச் செல்வார் என்கிற அவருடைய உண்மையை அவர்கள் நம்பவில்லை.
அவர்கள் முதலில் தேவனுடைய வாக்குறுதியை சந்தேகித்தார்கள்.
அது அவர்கள் வீழ்ச்சிக்கு முதல் ஆரம்பம்.
அவர்களின் இனத்தலைவர்கள் பத்து பேர் சொன்னதை முழுமையாக அவர்கள் நம்பினதால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கானானை மயிரிழையில் தவற விட்டு விட்டார்கள்.
தேவனுடைய வாக்குறுதியை, கடந்த கால தேவனுடைய பாதுகாப்பை விசுவாசித்து நடக்காமல் கானானுக்கு நேரில் பார்த்து வந்த காட்சிகளை கண்டு பயந்து அவிசுவாசித்தினால் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தார்கள். விளைவு 40 வருட வனாந்தர வாழ்க்கை யில் கலகம் செய்த அத்தனை பேரும் மடிந்து போனார்கள்.
அடுத்தது அவிசுவாசமென்பது தேவசித்தம் செய்யாமல் நம்மை தடுத்துவிடும். யூதர்கள் தேவன் சொன்ன வாக்குறுதியை சந்தேகப்படாமல் நம்பி இருந்தால் அவர்கள் தேவ சித்தம் செய்து கானானை அடைந்திருப்பார்கள்.
அந்த அவிசுவாசம் அவர்களை தேவனுடைய சித்தம் செய்யாமல் தடுத்து விட்டது.
அதுபோல்தான் நம்முடைய வாழ்க்கையில் காண்கிற காட்சிகளைக் அடிப்படையாக வைத்து தேவனை நம்பாமல் இருக்கும் பொழுது அனேக வேளைகளில் தேவ சித்தத்தை விட்டு விலகி தேவதிட்டத்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்ற தவறவிடுகிறோம்.
வேதம் சொல்லுகிறது போல விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாக இருப்பது இயலாத காரியம்.
முதலில் சந்தேகம் அவிசுவாசமாக மாறும் .
அவிசுவாசம் இறுதியில் தேவனுக்கு விரோதமான கலகமாக மாறும்.
எனவே சந்தேகம் என்கிற நச்சு விதையை முளையிலேயே கிள்ளி எறிந்தால் விசுவாச வாழ்க்கை செழிக்கும்.