யோசேப்பு அரிமத்தேயாவைப் பற்றி ஒரு விதமான . பார்வை
யோசேப்பு அரிமத்தேயாவைப் பற்றி ஒரு விதமான துயரம் உள்ளது.
அவர் இயேசுவுக்கு ஒரு கல்லறையை வழங்கிய மனிதன்.
அவர் யூதர்களின் அதிகாரம் மிக்க குழுவில் உறுப்பினராக இருந்தான்
அந்தச் சபை எடுத்த தீர்ப்புக்கும் தண்டனைக்கும் அவர் உடன்படவில்லை என்று வேதாகமம் சொல்கிறது.
ஆனால் அவர் அதற்கு எதிராகத் தனது குரலை உயர்த்தினார் என்று எங்கும் சொல்லப்படவில்லை.
இதுதான் வாழ்க்கையின் ஒரு பெரிய துயரம்.
உயிரோடு இருக்கும்போது கொடுக்க வேண்டிய மலர்களை,
மரணத்திற்குப் பிறகு அவர்களின் கல்லறைகளில் வைக்கிறோம்.
அவர்கள் உயிருடன் இருந்தபோது சொல்ல வேண்டிய பாராட்டுகளையும் நன்றிகளையும்,
மரண அறிவிப்புகளிலும் நினைவேந்தனைகளிலும் தான் சொல்லுகிறோம்.
உயிரோடு இருக்கும் ஒருவருக்குச் சொல்லப்படும் ஒரு வார்த்தை,
இறந்தவருக்குப் பிறகு சொல்லப்படும் ஏராளமான புகழ்ச்சிகளைவிட அதிக மதிப்புடையது.
— வில்லியம் பார்க்லே