இந்தப் பதிவு விசுவாசிகளுக்கு மட்டும்.
*உங்கள் சிந்தனைக்கு.*
*இந்தப் பதிவு விசுவாசிகளுக்கு மட்டும்.*
தூய ஆவியானவர் நமது வேத அறிவையும் ஆவிக்குரிய கண்களையும் மேலும் திறக்கட்டும்.
*நாம் (விசுவாசிகள்) எத்தனை ஆராய்ச்சி வேதாகமங்களைப் படித்தோம், எவ்வளவு* வேத *வியாக்கியானங்களைப் படித்தோம், எத்தனை* *ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தோம், எவ்வளவு பெரிய வேத ஆசிரியர்களின் கருத்துக்களை அறிந்தோம் *என்பதல்ல முக்கியம்* .*
நாம் அறிந்த சத்தியங்களையும், வேத விளக்கங்களையும், *தேவன் நமக்குக் கற்றுக்கொடுத்த அறிவையும் எந்த அளவுக்கு மற்றவர்களுக்குக்* *கடத்தி, அவர்களுடைய ஆவிக்குரிய சிந்தனையை* *வளர்த்தோம்,* *அவர்களுடைய ஆவிக்குரிய கண்களைத் திறக்க உதவினோம் என்பதே* *கர்த்தருடைய பார்வையில் முக்கியமானது.*
நாம் படித்த சிறந்த புத்தகங்களையும், ஆராய்ச்சி நூல்களையும் மற்ற விசுவாசிகளுக்கு அறிமுகப்படுத்தினோமா? அவற்றைப் படிக்க அவர்களை ஊக்குவித்தோமா? பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கு அவற்றை வாங்கிக் கொடுத்து உதவினோமா? இவைகளும் கர்த்தருடைய பார்வையில் சிறந்த ஊழியங்களாகும்.
நம்முடைய ஆவிக்குரிய அனுபவங்களையும், அறிவையும், மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காக எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோமோ, *அந்த அளவுக்கு தேவன் நமக்குக் கொடுத்த கிருபைகளும்* *மேலும் வளர்கின்றன.*
எப்படித் தம்முடைய பொருளாதாரச் செல்வத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொடுப்பது உயர்ந்த செயல் ஆகிறதோ, அதுபோல *ஆவிக்குரிய தரித்திரத்தில் இருக்கும் விசுவாசிகளுக்கு* *நம்மால் முடிந்த அளவு ஞானத்தையும், தேவன் கற்றுக்கொடுத்த* *அறிவையும், வேத விளக்கங்களையும், அவர்கள் புரிந்து கொள்ளாத சத்தியங்களை* *விளக்கிக் கொடுப்பதும் தேவனுக்குப் பிரியமான* *ஊழியமாகும்.*
ஆவிக்குரிய செல்வத்தைப் பகிர்ந்து கொடுப்பது ஒரு மிகப்பெரிய ஊழியம். அது சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும், தேவன் நமக்குக் கொடுத்த திராணிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப அதைச் செய்யும்போது, அந்த ஊழியத்தின் மூலம் தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது.
இந்த ஊழியங்களை முழுநேர ஊழியர்களே செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. *இது முழுநேர ஊழியர்களுக்குப் போட்டியும் அல்ல* .
நாம் மற்றவர்களுக்குப் போதிக்கும் சத்தியங்கள் வேத வசனத்தின்படி சரியானவை என்று உறுதியாக நம்பினால், எதிர்ப்பைக் குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை.
நாம் பெற்ற இரட்சிப்பை மற்றவர்களுக்குச் சொல்லாமல் மறைத்து வைப்பது எவ்வளவு தவறோ, அதுபோல நாம் அறிந்த சத்தியங்களையும், தேவன் நமக்குக் கற்றுக்கொடுத்த அறிவையும், நம்மோடு பழகுகிற கிறிஸ்தவ நண்பர்களுக்கும் மற்ற விசுவாசிகளுக்கும் பகிர்ந்து கொடுக்காமல் இருப்பதும் தவறே.
தேவன் நம்மோடு இருக்கிறார்.
தியானிக்க: 1 கொரிந்தியர் 12ஆம் அதிகாரம்.