விசுவாசிகள் கொத்தடிமைகள் அல்ல
விசுவாசிகள் கொத்தடிமைகள் அல்ல
விசுவாசிகளை கொத்தடிமைகளாக நடத்துகிற இந்த மாதிரி போதகர்கள் வேதத்தின் படி நடக்கிறவர்கள் அல்ல .
விசுவாசிகள் என்ன இவர்களுக்கு அடிமைகளா? விசுவாசிகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள்தான் போதகர்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசுவது வெட்கக்கேடான காரியம்.
போதகர்கள் விசுவாசிகளை இறுமாப்பாக வழிநடத்தல் கூடாது. அன்போடு கனிவுடன் நடத்த பழகிக் கொள்ளாதவர்கள் போதகர்களாய் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பது வேறு, இறுமாப்பாக பேசுவது என்பது வேறு. சபையில் கேலி, கிண்டல், நக்கல் இவைகளுக்கு இடம் கிடையாது. வார்த்தைகள் கிருபை பொருந்தியதாக இருக்க வேண்டும்
"நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம். நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்."
1 கொரிந்தியர் 3:9
இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து பேச வேண்டும்