கிறிஸ்துவுக்குள் நான் யார்?
கிறிஸ்துவுக்குள் நான் யார்?
ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ நாம் கிறிஸ்துவுக்குள் என்னவாக இருக்கிறோம் என்கிற புரிதல் மிகவும் அவசியம்.
அந்த ஆவிக்குரிய வெளிச்சம் தான் நம்மை இறுதி வரை வழி நடத்தும்.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது எல்லா நிலைகளிலும் வெற்றிகரமான, மகிழ்ச்சியான, சூழ்நிலைகளாக இருக்காது. அது மேடு பள்ளங்கள் தோல்விகள், இழப்புகள், நஷ்டங்கள் ஏமாற்றங்கள் துரோகங்கள் நிறைந்த வாழ்க்கையாகத்தான் அனேக நேரங்களில் இருக்கும்.
அப்பொழுது கீழ்க்காணும் இந்த சத்தியங்கள் நம்மை உற்சாகப்படுத்தும்.
1. நான் ஒரு பரிசுத்தவான்.எபே 1:1
2. நான் இயேசு கிறிஸ்துவின் பிள்ளை.யோவா 1:12
3. நான் கிறிஸ்துவின் நண்பன்.யோவா15:15
4. நான் நேர்மையாளனாக அல்லது நீதிமானாக்கப்பட்டவன்.
ரோம5:1
5. நான் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவன்.கொலோ 2:10
6. நான் மீட்கப்பட்டு ,மன்னிப்பு பெற்றவன்.கொலோ1:14
7. நான் கிறிஸ்துவின் உடலில் ஒரு அங்கம்.1கொரி12:27
8. நான் கிறிஸ்துவின் பிள்ளையாக சுவீகரிக்கப்பட்டவன்.எபே 1:5
9. நான் கர்த்தரோடு ஒரே ஆவியினால் இணைக்கப்பட்டவன்.1கொரி.6:17
10 . நான் விலைக்கு வாங்கப்பட்டவன். கிறிஸ்துவுக்கு மட்டும் சொந்தமானவன்.1கொரி 6:19,20
(இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)