Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

சபைக்கு ஊழியர்களும் தேவை, விசுவாசிகளும் தேவை.

சபைக்கு ஊழியர்களும் தேவை, விசுவாசிகளும் தேவை.
எந்த ஒரு அமைப்பிற்கும், சபைக்கும், தலைமை என்பது அவசியம் . அவைகளை
வழி நடத்துவதற்கு தேவன் தலைவர்களை நியமித்திருக்கிறார்.
தலைமைப்பதவி என்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
அது தேவன் முன் குறித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
அதனால் அவர்கள் விசுவாசிகளை விட மேன்மையானவர்கள் என்று கருத முடியாது.
அந்தத் தலைமை பதவியை நாம் இச்சிப்பது தவறு.
இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த தேவன் மோசேயை முன் குறித்தார்.
அவனும் தேவனுடைய கட்டளைகளின்படி தன்னை சபைக்கு மேலாக உயர்த்தாமல் அந்த ஜனங்களை வழி நடத்தினான்.
லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரனாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனானையும் கூட்டிக்கொண்டு மோசேக்கு விரோதமாக கலகம் பண்ணினான். விளைவு பூமி தன் வாயைத் திறந்து அவர்களை விழுங்கியது
எண்ணாகமம் 16வது அதிகாரம்
இதன் மூலம் தேவன் நமக்கு குறிப்பாக புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்குஉணர்த்தும் பாடம் என்ன?
ஒவ்வொரு விசுவாசியும் தலைவனே.
ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் கிருபைகளையும், வரங்களையும், கொடுத்திருக்கிறார்.
அந்த வரங்களை கர்த்தருடைய சித்தத்தின்படி பயன்படுத்துபவன் அந்த வரங்களின் மூலம் பயன் பெறுபவர்களுக்கு தலைவன் ஆகிறான்.
தேவனுடைய பார்வையில் எல்லோருடைய உதவியும் தேவனுடைய பணிக்கு தேவை.
தேவன் யாரையும் பயனற்றவர்களாக, உபயோகம் இல்லாதவர்களாக, வரங்கள் இல்லாதவர்களாக
கிருபைகள் இல்லாதவர்களாக அழைக்கவில்லை.
இதை ஒவ்வொரு விசுவாசியும் புரிந்து செயல்பட வேண்டும்.
எனவே விசுவாசிகள் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட தலைவர்களைகுறித்து பொறாமைபடவோ, ஏங்கவோ, அவர்களுக்குஎதிர்த்து நிற்கவோ அவசியம் இல்லை.
தலைவனுக்கு தேவன் பத்து தாலந்துகள் கொடுத்து அதை அவன் பயன்படுத்தி என்ன வெகுமதி‌ பெறுகிறானோ அதேபோலவே ஒரு தாலந்து பெற்றவன் அதை முழுமையாக பயன்படுத்தினால் அவனும் அதே வெகுமதி பெறுவான்.
இதுதான் தேவனுடைய சட்டம். இந்த சட்டம் மாறாதது.
நாம் செய்யும் பணியில் நம்முடைய பரிசுத்தம், உண்மை, தியாகம், அர்ப்பணிப்பு, நேர்மை இவைகளின் அடிப்படையிலேயே தான் நமக்கு பரலோகத்தில் பரிசுகள் உண்டு. தேவன் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல. ஒரு தாலந்து பெற்றவனுக்கு பரிசு குறைவாகவும் ஐந்து தாலந்து பெற்றவனுக்கு பரிசு அதிகமாகவும் கொடுக்கிறவர் அல்ல.
கடவுள் கொடுத்த தாலந்தை ஒருவன் எப்படி பயன்படுத்துகிறான் என்பதின் அடிப்படையில்தான் அவனுடைய வெகுமதிகள் தீர்மானிக்கப்படும்.
எனவே எல்லோரையும் மதிப்போம்.
நமக்கு நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கு அவர்கள் கர்த்தருடைய வசனத்தின் படி நடக்கும் பொழுது அவர்களை மதிப்போம்.
யாரையும் பார்த்து பொறாமை கொள்ள வேண்டாம்.
நமக்கு தேவன் என்ன கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்து அதை பயன்படுத்த தேவன் கிருபை தருவாராக.
The important thing is not status but faithfulness doing the work God wants us to do.
Every member is important to God and to the church.1Cor12:14-18 .W.W.Wiersbe