Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

தேவனுடைய வார்த்தையை தன் ஆயுதமாகக் கொண்டிருக்கிறவன்
தேவனுடைய வார்த்தையை தன் ஆயுதமாகக் கொண்டிருக்கிறவன்
தேவனுடைய வார்த்தையை தன் ஆயுதமாகக் கொண்டிருக்கிறவன் ,அதைத் தன் நண்பனாக கருதுகிறவன், அதை தன் துணையாக கொண்டு வாழ்க்கை நடத்துகிறவன், அதை தன் உயிரைப் போல நேசிக்கிறவன் அவைகள் வரும் சிந்தனையை தன்னுடைய சிந்தனையை போல் கருதுகிறவன், எப்படிப்பட்ட தனிமையின் வாழ்க்கையில் கடந்து சென்றாலும், எப்படிப்பட்ட புறக்கணிப்பு அவனுக்கு நேர்ந்தாலும் எப்படிப்பட்ட இழப்புகளை சந்தித்தாலும் அவன் ஒரு நாளும் கர்த்தருடைய அன்பை விட்டு பிரிந்து செல்ல மாட்டான்.
சத்தியத்தை தவறாக போதிப்பவர்கள் எப்படிப்பட்ட உயர்நிலையில் இருந்தாலும் அவர்களைக் கண்டு துளியும் அஞ்ச மாட்டான்.
அவர்களோடு ஒரு இமைப்பொழுதும் சமரசம் செய்து கொள்ள மாட்டான்.
அவனுக்கு
செல்வாக்கு இல்லாவிட்டாலும் தேவனுடைய திருவாக்கு அவனிடத்தில் இருப்பதால் தனிமையின் பாதையில் கர்த்தருடைய சித்தத்தை தைரியமாக நிறைவேற்றுவான். இப்படிப்பட்ட தைரியமுள்ள கிறிஸ்தவ மக்கள் இன்றய கடைசி காலத்தின் தேவையாக காணப்படுகிறார்கள்.
உண்மையான எழுப்புதல்
வரவேண்டுமானால் தைரியமுள்ள விசுவாசிகள் எழும்ப வேண்டும் .இது காலத்தின் கட்டாயம், அல்லது தேவை