Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

விசுவாசிகள் கற்று கொள்ள வேண்டிய பாடம்.
உங்கள் சிந்தனைக்கு !
அப்போ 15:14,15 நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம்.
Biblical illiteracy of believers and the misuse of ministers of God
இந்த இரண்டு வேத வாக்கியங்களில் ஒரு முக்கியமான சத்தியத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்.
ஆதி திருச்சபை வரலாற்றில் 15வது அதிகாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
முதல் புறஜாதி திருச்சபை (Gentile Church)அந்தியோகியா திருச்சபை ஆகும்.
அந்த சபையில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், 'நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது”என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர்.. இதனால்அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின.
எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு அந்தியோகியா திருச்சபையாரால் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் எருசலேம் வந்து இது பற்றி அப்போஸ்தலர்களிடம் விவாதிக்க கூறினர்.
ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்கள்.
நெடுநேர விவாதத்துக்குப்பின்பு பேதுரு எழுந்து எவ்வாறு தேவன் யூதர்களுக்கு தூய ஆவியைக் கொடுத்ததுபோல் புற இன மக்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டார் என்பதை விவரித்து கூறினார்.
இப்படியிருக்க, “நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்”.
இதையடுத்து யாக்கோபு கூறிய வார்த்தைகள்தான் நாம் கவனிக்க வேண்டிய வார்த்தைகள்
‘பேதுரு சொன்ன வார்த்தைகளும் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.என்று சொன்னார்’






யாக்கோபு அப்படியே பேதுரு கூறியதை ஏற்றுகொள்ளவில்லை.
பேதுரு, கிறிஸ்து முதலில் தெரிந்துகொண்ட 12 அப்போஸ்தலர்களில் முதன்மையானவர்.
மாமிசத்தில் இயேசு உயிரோடு இருந்த காலத்தில் அவரோடு நெருக்கமாக இருந்தவர்.
பிரதான கட்டளையை (Great Commission ) பெற்றவர்.
சபையின் தூணென்று அழைக்கப் பெற்றவர்.
பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேல் முதல் முதலாக பொழிந்தருளப்பட காரணமாய் இருந்தவர்.
எனவே அவர் சொல்வதெல்லாம் சரி என்று கூறவில்லை
ஆனால் சொன்னது பேதுரு சொன்ன காரியங்கள் எல்லாம் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களுக்கு ஒத்திருக்கிறது என்பதுதான்.
இதுதான் கவனிக்க வேண்டிய காரியங்கள்.
1. எவ்வளவு பெரிய போதகர்களாக இருந்தாலும் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், தேவனால் மிக வல்லமையாக பயன்படுத்தப்பட்டாலும் அவர்கள் சொல்லும் அத்தனை உபதேசங்களையும், கோட்ப்பாடுகளையும், போதனைகளையும், அறிவுரைகளையும் சரி என்று ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
2.அவர்களுடைய அனுபவங்கள் எவ்வளவு ஆவிக்குரியதாக தோன்றினாலும் அவைகள் அடிப்படை சத்தியங்களுக்கு, உபதேசங்களுக்கு ஒத்துள்ளதாக இருக்கவேண்டும்
" இறைவாக்கினர் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன" என்று நாம் சொல்லும் அளவிற்கு இருக்கவேண்டும்.
விசுவாசிகளுடைய வேத கல்வியறிவின்மையை (Biblical illiteracy) தவறாக பயன்படுத்தி விசுவாசிகளை வஞ்சிக்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
புத்தியுள்ள ஆராதனை, நடனம், வெளி தோற்றங்களை பற்றிய உபதேசங்கள், சபையில் விசுவாசிகளுடைய பங்கு விசுவாசிகளுடைய சுயாதீனம் ( கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு கொடுத்த உரிமை வாழ்வை) இவற்றை பற்றிய சரியான புரிதல் விசுவாசிகளுக்கு அவசியம்.
இதற்கு ஒரே வழி விசுவாசிகள் வேத வசனத்தில் தேறியவனாக காணப்பட வேண்டும் "இப்படியும் சொல்லியிருக்கிறதே” என்றுசொல்லும் அளவிற்கு விசுவாசிகள் வளர வேண்டும் .
இதுதான் ஒரே தீர்வு