Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

Full-time worker and non full-time worker
உங்கள் சிந்தனைக்கு!

தேவனுடைய பார்வையில் ‘Full-time worker and non full-time worker ‘என்கிற பாகுபாடு கிடையாது.

"முழுநேரபணியாளர் அல்லாதவர்கள் என்பவர்கள் எல்லாநேர பணியாளர்கள்".R.Stanley.
They are " All -time workers'’வாழ்க்கை முறையை நாம் கவனித்துப் பார்த்தால் விளங்கும்

ஆதி திருச்சபையில் குருமார்களின் வாழ்க்கை முறையை நாம் கவனித்துப் பார்த்தால் விளங்கும்

.
The lifestyle of Clergy in early Church days .

ஆதி திருச்சபையில் போதகர்கள், மேய்ப்பர்கள், மூப்பர்கள் எல்லோரும் எல்லோரையும் போலவே விசுவாசிகளோடு விசுவாசிகளாக வாழ்ந்து. வந்தனர்.
.
பாதிரியார்கள் மற்றும் ஆயர்கள் கூட சாதாரண உழைக்கும் மனிதர்களாக வாழ்ந்து, தங்கள் பண்ணைகளையும் தொழில்களையும் பராமரித்தனர். தேவைப்பட்டால் மட்டுமே உள்ளூர் போதகர்களுக்கு சபை உதவி வழங்கியது.

பெரும்பாலான விஷயங்களில், சமூகவியல் ரீதியாக, குருமார்கள் சாதாரண நபரிடமிருந்து வேறுபடவில்லை.

இதை பற்றி Alexander Faivre, என்பவர் தனது " The Emergence of the Laity in the Early Church". புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் (Mahwah, N.J.: Paulists Press, 1990, pp. 144-45)

".Presbyteroi [priests] and even some episkopoi [bishops] continued to live as ordinary working men, tending their farms and businesses. Only in case of need did the local episkopos subsidize the presbyter. In most respects, sociologically, the presbyter was not differentiated from the lay person,"

ஆனால் சபை என்றைக்கு அரசாங்கத்தோடு இணைந்து அரசாங்கத்தின் மதமாக மாறியதோ, அன்றைக்கே ஆதி திருச்சபையின் அடிப்படை உபதேசங்கள் மறக்கடிக்கபட்டன.

இதை ஆதி அப்போஸ்தலர்கள் நன்கு புரிந்துகொண்ட காரணத்தினால்தான் குருமார்கள், விசுவாசிகள் (clergy and Laity)என்கிற பாகுபாடு இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

எல்லோருமே சகோதரர்கள்தான்.

இதில் பிரபுத்துவம் என்பது போல ஒன்றும் கிடையாது.

இதை தவிர 1 கொரி 3:5,9 ஐ நன்கு தியானிக்க வேண்டும் .
. “பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.”

"நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்."

இதில்"நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே."
நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்." என்கிற வார்த்தைகளை கவனிக்க வேண்டுகிறேன்.

ஆனால் இன்று சபையின் நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

*இந்த நிலை மாறாவிட்டால் சபை தேவன் எதிர்பார்க்கும் வளர்ச்சியை ஒருபோதும் அடையாது.
குருமார்கள்(Clergy) விசுவாசிகளோடு விசுவாசிகளாக இணைந்து வாழவேண்டும்.
இயேசு கிறிஸ்துவும் மக்களோடு மக்களாகத்தான் வாழ்ந்தார்.