Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

நீங்கள் நாங்கள்
உங்கள் சிந்தனைக்கு:
முழு நேர பணியாளர்கள், ஊழியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் விசுவாசிகளை நோக்கி" நாம் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறோம் "என்று மனதளவில் மட்டும்எண்ணிக்கொள்ளாமல் அதை நடைமுறையில் செயல்படுத்துகிறவனே உண்மையான புதிய ஏற்பாட்டு ஊழியக்காரன்.

ஆனால் நடைமுறையில் இன்றைக்கு 99.9 %ஊழியர்கள் அப்படி காணப்படவில்லை.
'நீங்கள்' நாங்கள்' என்கிற அந்த பிரிவினை இவர்கள் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது.

இறையியலை ஆழமாக படித்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் கூட முதல் மூன்று நூற்றாண்டுகளில் சபை எப்படி இருந்தது, எந்த அமைப்பில் இருந்தது ,அந்த காலத்தில் இந்த விசுவாசி ஊழியக்காரர் என்கிற பிரிவினை இருந்ததா என்பது பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் அதை ஒரு நாளும் சபையில் வலியுறுத்தி போதிக்க மாட்டார்கள் .
இது எவ்வளவு பெரிய மாய்மாலம் தெரியுமா.?

என்றைக்கு விளம்பரங்களில் "லேவியர் முகாம்" "ஊழியக்காரர்கள் கூடுகை" "அப்போஸ்தலர் கூடுகை" "ஊழியக்காரர்கள் சிறப்பு முகாம்" என்றெல்லாம் அறிவித்துவிட்டு சபையை தாங்குகின்ற விசுவாசிகளுக்கு அழைப்பில்லாமல் அனுமதி இல்லாமல் அவர்களை இரண்டாம் தரமாக நடத்துகிற இந்த சிந்தனை இருக்கின்ற வரையில் எந்த ஊழியக்காரர்களும் தாங்கள் தேவனுடைய திட்டத்தை செயல்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொள்ள தகுதி கிடையாது.
எந்த கூட்டமாக இருந்தாலும் தகுதி உள்ள விசுவாசிகளை அழைத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து நாங்களும் உங்களைப் போன்றவர்கள் தான் என்று சொல்கிற அந்த மனப்பான்மை இன்றைய கிறிஸ்தவ தலைவரிடம் அணு அளவு கூட கிடையாது.
இந்த பிரிவினை சபையில் காண்கின்ற மற்ற எல்லா பிரிவினை காட்டிலும் ஆபத்தானது.
இன ,மொழி, ஜாதி ,நிறம் இவைகளின் அடிப்படையில் உலகம் பிளவு பட்டு கிடக்கிறது.
ஆனால் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய கிறிஸ்தவம் வேதத்தை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தினால் எல்லோரும் சகோதரராகளாக கிறோம் என்றுவேதம் போதிக்கிற உண்மையை காலில் மிதித்து விட்டு நாங்கள் உங்களை ஆளப்பிறந்தவர்கள் என்று என்று சிம்மாசனத்தில் வீற்றிருக்கிற ஊழியக்காரர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் நியாயத்திற்கு நாளில் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களே.
வழிநடத்த ஊழியர்கள் அவசியம். ஆனால் அந்த அழைப்பு அந்த அழைப்பை தவறாக பயன்படுத்தி ஆளுகை செய்யக்கூடாது,
நாம் எல்லாருமே தேவனுடைய பார்வையில் அவருடைய சீடர்களாக இருக்கிறோம். அவனவன் என்ன நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அதிலே நிலைநிறுக்க வேண்டும். நம்முடைய அழைப்பில் எந்த மேன்மையும் கிடையாது .
அழைத்தவரே நம்முடைய மேன்மை இதை புரிந்து கொள்ளாத வரை ஊழியக்காரர் ,விசுவாசி என்கிற பிரிவினை நீடித்துக் கொண்டுதான் இருக்கும்