மூப்பர்கள்
உங்கள் பட்டியல்கள்
ஆதி திருச்சபைகளில் சபைகளை நடத்த மூப்பர்கள் என்று குழுவாகத்தான் நியமிக்கப்பட்டார்கள். புதிய ஏற்பாட்டில் 32 இடங்களில் "மூப்பர்கள்" என்று பன்மையில் தான் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் நமது மொழிபெயர்ப்பில் மூப்பர் என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டது பலவிதமான தவறான வழிமுறைகளை ஏற்படுத்தி விட்டது.
உதாரணமாக தீத்து 1:5 பார்க்கலாம்
“நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.” இது புதிய மொழிபெயர்ப்பு
சபை என்பது குழுவாக நடத்தப்பட வேண்டும் என்பது இன்றய சபையில் உள்ள நிலைமைகளை பார்க்கும்போது சரியாக தோன்றுகிறது.
எல்லோருக்கும் எல்லா கிருபைகளும் தாலந்துகளும் இருக்க முடியாது.
போதிக்க, நிர்வகிக்க ,பொருளாதாரத்தை சீர்படுத்த என்று எல்லாவற்றையும் ஒரே நபரால் எப்படி நிர்வகிக்க முடியும் ?
எப்படி சபைநடத்துகிற மேய்ப்பன் எல்லாவற்றையும் தன் தலை தலைக்குமேல் தூக்கி சுமந்தால் பவுல் சொல்லுவது போல "நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் "என்று எப்படி கூறமுடியும் "
சபையின் ஆரம்ப நிலையென்றால் ஒருவேளை ஒத்துக்கொள்ளலாம் .
சபை வளர்ந்து செழித்து வரும் போது மற்ற பொருளாதார நிர்வாக பொறுப்புகளை கிருபை பெற்றவர்களிடம் ( உடன் மேய்ப்பர்கள் மூப்பர்கள்) கொடுத்தால் மட்டுமே பவுலை போல ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருக்க முடியும்.
இல்லையென்றால் , சபையில் விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகலாம்
ஆனால் விசுவாசிகளின் தரம் ஒருநிலைக்கு மேல் உயராது.
There is another danger .
தனிமனிதர் ஆதிக்கம் செலுத்தும் சபைகளில்”the pastor’s character will become the character of the fellowship or church “ as great Bible teacher from UK David Pawson said.
it is not a healthy trend.
அதே வேளையில் சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட மூப்பர்கள் இருக்கும் போது மூப்பர்களுடைய நிறைவு மற்றும் குறைகள் சமன் செய்யப்படும்.
மூப்பர்களுடைய தகுதி, மற்ற ஊழியங்களை போல வரங்களை சார்ந்து அல்ல குணங்களை சார்ந்தது.
என்னை பொறுத்த அளவில் “Brethren Church” “யோகோவசம்மா சபை” இவைகளின் பின்பற்றப்படும் முறைதான் வேதத்தின் அடிப்படையில் சரி என்று எண்ணுகிறேன் .