2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும். 2
உங்கள் சிந்தனைக்கு:
2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும்.
நாம் ஏன் இந்த தேர்தலுக்காக அதிக பாரத்தோடு ஜெபிக்க வேண்டும்.?
மூன்று காரணங்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும்.
1நம்முடைய அழைப்பு.
2.நம்முடைய பொறுப்பு
3.நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து.
இந்தப் பதிவில் நம்முடைய அழைப்பை குறித்து பார்க்கலாம்.
அடிப்படையிலேயே ஒரு விசுவாசி என்பவன் புதிய ஏற்பாட்டு ஆசாரியன்.
ஆசாரியப்பட்டம் என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் கொடுக்கும் மிகப்பெரிய ஒரு சிறப்பு.
நாம் மட்டுமே தேவனுடைய சன்னிதானத்தில் தேசத்திற்காக மன்றாடவும், விண்ணப்பிக்கவும், பரிந்து பேசவும் அனுமதி பெற்றவர்கள்.
We are the only authorised servants of God to pleade, pray and intercede for our country.
அதற்காகத்தான் அவர் நம்மை இந்த உலகத்தில் வைத்திருக்கிறார்.
இந்த மிகப்பெரிய மாண்பை நாம் சரியான முறையில் கையாள வேண்டும்.
இந்த உலகத்தில் அவருடைய சித்தத்தின்படி நாம் அவரை நிர்பந்திக்க முடியும்.
அநீதியான நீதிபதியிடம் விதவை இடைவிடாமல் மன்றாடியதை போல நாம் நமது தேசத்தின் உள்ள சூழ்நிலையை நினைத்து நாம் இடைவிடாமல் மன்றாட அழைக்கப்பட்டிருக்கிறோம்.
மற்ற மார்க்கத்தார் போல
அரசியல் ,போராட்டங்கள் என்று உலக வழிமுறைகளை
பின்பற்ற வேதம் நமக்கு போதிக்கவில்லை.
நம்முடைய ஆயுதங்கள் அரண்களை நிர்மூலமாக்கதக்க ஆயுதங்கள்.
இந்த உலகம் செயல்படுத்தும், பின்பற்றும் கருவிகளை நாம் பின்பற்ற கூடாது.
நாம் நம்முடைய ஜெபமாகிய ஆவிக்குரிய ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும்.
நாட்டினுடைய அடிப்படை தத்துவங்கள், கோட்பாடுகள் அசைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் அசையாத இராஜ்ஜியத்தின் பிள்ளைகளாகிய நாம் நம்முடைய ஜெபம் என்கிற ஆயுதத்தின் மூலம் இந்த தேசத்தில் ஒரு அசைவை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நம்முடைய தேவன் அதை எதிர்பார்க்கிறார்.
சபை ஜெபிக்கட்டும், ஊழியர்களும் ஜெபிக்கட்டும் என்று நாம் நம்முடைய பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது.
இந்தக் காரியத்திற்காக ஆசாரிய பட்டம் பெற்ற நான் ஜெபிக்காவிட்டால் வேறு யார் ஜெயிப்பார் என்கிற சிந்தனை நமக்கு வேண்டும்.
நம்முடைய ஆசாரிய பட்டத்தை இதற்கு பயன்படுத்தாமல் வேறு எதற்கு பயன்படுத்த போகிறோம்.?
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ேமத்தைக் கொடுப்பேன்.
2 நாளாகமம் 7:14
பழைய ஏற்பாட்டு யூத ஜனங்களுக்கே இப்படிப்பட்ட வாக்குறுதியை தேவன் அளித்திருக்க புதிய ஏற்பாட்டின் ஆசாரியர்களாக நியமிக்கப்பட்ட நம்முடைய மன்றாட்டை ஒருபோதும் தேவன் புறம்பே தள்ளுவதில்லை.
2024 தேர்தல் முடிவுகள் நாம்
இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
1 திமொத்தேயு 2:2.
தேவனுடைய சித்தத்தின் படியும் திமொத்தேயு 2:2ல் சொல்லப்பட்ட பவுலின் அறிவுரையின்படியும் நாம் ஏறெடுக்கும் எந்த ஜெபங்களையும் தேவன் புறம்பே தள்ள மாட்டார் ஆனால் ஒரே ஒரு காரியத்தை தேவன் எதிர்பார்க்கிறார்
நாம் நம்மை தாழ்த்தி பொல்லாத வழிகளை விட்டு விலக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
இதைத் தவிர 2024 நாம் நினைத்ததை தேவனிடத்தில் பெற்றுக் கொள்ள வேறு எந்த மாற்று வழியும் இல்லை. எனவே விசுவாசிகளே உங்களுடைய ஆசாரிய உரிமையை பயன்படுத்துங்கள். முக்கியமான காலகட்டத்தில் ஏசாவை போல் யாரிடமும் விற்று விடாதீர்கள். அடுத்த தலைமுறை ஒரு விடுதலையோடு ஆண்டவரை சேவிக்க இன்றைக்கு நீங்கள் ஏறெடுக்கும் ஜெபம் அதிக பயனுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.