Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும்.பாகம்3
உங்கள் சிந்தனைக்கு:

2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும்.பாகம்3
நாம் ஏன் இந்த தேர்தலுக்காக அதிக பாரத்தோடு ஜெபிக்க வேண்டும்.?
மூன்று காரணங்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும்.

1நம்முடைய அழைப்பு.
2.நம்முடைய பொறுப்பு
3.நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து.

கடந்த பதிவில் நாம் நம்முடைய ஆசாரிய அழைப்பை நிறைவேற்றும்படியாக வரப்போகின்ற தேர்தலுக்காக ஜெபிக்க வேண்டும் என்கிற காரியத்தை குறித்து தியானித்தோம்.

இந்தப் பதிவில் நாம்
ஆசாரியர்களாக அழைக்கப்பட்டதனுடைய பொறுப்பு என்ன என்பதையும் அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை பற்றியும் பற்றி தியானிக்கலாம் .

பழைய ஏற்பாட்டில் ஆசாரியன் , மனுஷருக்காகத் தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.
எபிரேயர் 5:1
A priest represents the people.
At the same time he represents God to the people.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்
மதகுரு, மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்.

புதிய ஏற்பாட்டின் உபதேசத்தின்படி ஆண்டவரை அறியாத மக்களுக்குக்காக ஆன்மீக மற்றும் முக்கிய தேவைகளுக்காக கடவுள் முன்பு பணிபுரிய மதகுருவாக மனம் திரும்பிய விசுவாசிகள் நியமிக்கப்பட்டிருக்கிறோம்.

உலக மக்கள் மகிழ்ச்சியோடு சந்தோஷத்தோடு வாழ வெறுப்புணர்ச்சி இல்லாமல் வாழ நாம் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் இதைப் பற்றி உள்ள ஒரு அருமையான வசனம் ஒன்றுஉண்டு.

"உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ, அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்; அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்; ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான் உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது. “
எரேமியா 29:7

இது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு.


தேவ மக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்குள்ள மக்களுடைய சந்தோஷத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்கிற கட்டளை இன்றைக்கு நேற்று ஏற்பட்டதல்ல .
கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏற்படுத்தப்பட்ட தேவனுடைய கட்டளை.

பல ஆண்டுகளுக்கு முன்பாக கம்யூனிச சிறையில் அடைக்கப்பட்ட ரிச்சர்ட் உம்ராண்ட்(Richard Wurmbrand) என்கிற தேவ மனிதன் தன்னுடைய தேசத்தை குறித்து சொல்லிய காரியத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

அவர் வாழ்ந்த தேசத்தில்(ருமேனியா )உள்ள மக்கள் தேசத்தை குறித்து அக்கறை இல்லாமல் ஜெபிக்காத காரணத்தினால் அந்த தேசத்தை கம்யூனிசம் ஆட்கொண்டு விட்டதாக குறிப்பிடுகிறார். தாங்கள் வாழும் தேசத்திற்காக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டும் என்கிற அவசியத்தை அந்த நூலில் குறிப்பிடுகிறார்.

கடவுள் இந்த தேசத்தில் நம்மை ஆசாரியர்களாக வைத்திருக்கின்ற பொறுப்பை நாம் உணர்ந்து நாம் ஜெபிக்க வேண்டும்.

எல்லா மக்களும் ஆண்டவரை அறிய வேண்டும் என்பது தேவனுடைய சித்தம் என்பது உண்மைதான் .ஆனால் அது எப்படி சாத்தியமாகும். அவர்களைக் குறித்த அக்கறையை நாம் ஜெபத்தில் வெளி காட்டாமல் எல்லா மக்களும் தேவனை அறிகிற அறிவை அடைவது சாத்தியமல்ல.
நம் தேசத்தில் இருந்த இருள் அகன்று போக உலகத்தில் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் ஜெபித்ததை நாம் மறக்க கூடாது.

அதனுடைய விளைவாகத்தான் இன்று நமது தேசம் ஓரளவுக்காவது கல்வியிலும் விஞ்ஞானத்திலும் பகுத்தறிவிலும் ஒரு மிகப்பெரிய வெளிச்சத்தை பெற்றிருக்கிறது.உலக மக்கள் நமக்காக ஜெபித்த ஜெபமே நம்முடைய இன்றய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அடித்தளம்.

சுதந்திரம் அடைந்த பிறகு என்றும் இல்லாத வகையில் ஒருநெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம்.

நாம் இந்த நேரத்தில் நம்முடைய ஆசாரிய பொறுப்பை உணர்ந்து ஜெபிக்க வேண்டும்.
தேவ சமூகத்தில் அக்கறையோடு, அர்த்தத்தோடு, கருத்தாய் ஜெபிக்கும் போது நிச்சயம் அதிசயங்கள் நிகழும். இந்த நாட்டினுடைய நலன் கருதி நாம் ஜெபிக்கிற காரியம் ஒரு நற்கிரியை. இதைசெய்ய நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.தீத்3:1-2.

அதே வேளையில் நம்முடைய ஜெப குறிப்புகள் அந்தரங்கமாக இருக்க வேண்டும். ரகசியமாய் ஜெபிப்பதே
ஜெபத்தின் ரகசியம். சிறு சிறு குழுக்களாக விசுவாசிகள் கூடி ஜெபித்தால் அதில் மிகுந்த பலன் உள்ளது. மிகப் பெரிய கூடுகைகள் பிற இனத்தார் மத்தியில் சந்தேகங்களை எழுப்பும்
. ஞானமாக ஜெபித்து நம்முடைய பொறுப்பை நிறைவேற்றுவோம்.