Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும். 1
உங்கள் சிந்தனைக்கு:

2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும்.
ஒவ்வொரு விசுவாசிக்கும் தாங்கள் வாழுகின்ற தேசத்தை குறித்து, தாங்கள் நிறைவேற்ற வேண்டிய அரசியல் கடமை ஒன்று உண்டு.
தாங்கள் வாழுகின்ற தேசத்தில் உள்ள அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நாம் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

2024 இல் நம் தேசம் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஒரு முக்கியமான தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது.
இந்தத் தேர்தல் இதுவரைக்கும் நடந்த தேர்தல்களைப் போல அல்ல. ‌கிறிஸ்தவர்களாகிய நமக்கு இது ஒரு முக்கியமான தேர்தல்.
என்னைபொறுத்த அளவில் இந்த தேர்தல் விசுவாசியாகிய எனக்கு ஒரு முக்கியமான தேர்தல்.
இந்தத் தேர்தலில் தேவனுடைய சித்தம் நிறைவேற ஜெபிப்பது நம்முடைய கடமை.

தேவனுடைய இறையாண்மை என்று ஒன்று இருந்தாலும் நாம் நம்முடைய கடமையை செய்ய தேவன் எதிர்பார்க்கிறார்.
ஒவ்வொரு விசுவாசியும் தலைவர்களையோ, சபையையோ எதிர்பார்க்காமல் ஒரு மிகப்பெரிய பொறுப்புணர்வோடு இந்த தேர்தலுக்காக ஜெபிக்க உங்களை அழைக்கிறேன்.
எதற்குமே நமக்கு ஆதாரம் வேத வசனமே.

1தீமோ 2:1-3 வரை உள்ள வசனங்கள்
ஒரு விசுவாசி தான் வாழுகின்ற தேசத்தில் அதிகாரம் உள்ள யாவருக்கும் எப்படி ஜெபிக்க வேண்டும் என்கிற கடமையை குறித்து விளக்குகின்ற ஒரு பகுதி.

இந்தக் கடிதம் எழுதப்பட்ட காலம் கிறிஸ்தவர்கள் நீரோ மன்னனின் ஆட்சியில் மிகவும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட காலம்.
கிறிஸ்தவ மதம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத மதமாக இருந்த காலம்.
ஆண்டவர் வருகையை எதிர்நோக்கி இருந்த காலம்.

இந்த‌காலகட்டத்தில்தான் பவுல் இந்த வார்த்தைகளை எழுதுகிறார்.
இதைத்தான் நாம் முக்கியமாக கருத வேண்டும்.

அவ்வளவு பாடுபட்டு சித்திரவதைகளுக்கு உள்ளான விசுவாசிகளை பவுல் கலகம் செய்யவோ மற்றும் எதிர்மறையான காரியங்களை செய்யவே தூண்டவில்லை.
அதற்கு மாறாக அந்த அதிகாரிகளுக்காக, அரசர்களுக்காக விண்ணப்பங்களையும், மன்றாட்டுகளையும், பரிந்து பேசுகின்ற காரியங்களையும், நன்றி செலுத்தக்கூடிய காரியங்களையும் செய்ய வேண்டும் என்கிற‌ கருத்தை மிக முக்கியமான ஆலோசனையாக பவுல் சொல்லுகிறார்.
(Supplications ,prayers, intercession giving of thanks). இந்த இடத்தில் நாம் இறை பக்தியும், பரிசுத்தமும் உள்ளவர்களாய், சமாதானமும், அமைதியும் உள்ள வாழ்வை வாழ்வதற்காக இவைகளை செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். இங்கு வலியுறுத்தி சொல்லக்கூடிய காரியம் "நாம்" என்கிற வார்த்தைதான்.
நாம் பயபக்தியோடு வாழ, விடுதலையோடு வாழ, பயமில்லாமல் வாழ, கர்த்தர் நமக்கு நியமித்த கடமைகளை இந்த தேசத்தில் செய்ய அதிகாரிகளுக்காக, விண்ணப்பங்களையும் மன்றாட்டுகளையும் ஜெபங்களையும் நாம் ஏறெடுக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நமது தேசத்திற்கு வரக்கூடிய ஆபத்தை நாம் அறிந்திருக்கிறோம் .
அப்படி இருக்கும் பொழுது நாம் அதை எதிர்த்து ஜெபத்தில் போராட நமக்கு தேவன் உரிமையை கொடுத்திருக்கிறார். அதைத்தான் பவுல் அன்றைக்கு சபை மக்களுக்கு அறிவுரையாக சொல்கிறார்.
இது தேவனுடைய பார்வையில் நன்மையும் பிரியமும் ஆன காரியமாக இருக்கிறது. எனவே நீங்கள் நமது தேசத்திற்காக வரக்கூடிய தேர்தலுக்காக சபைகள் ஜெபிக்க வேண்டிய அளவிற்கு ஜெபிக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். தலைவர்கள் பாரத்தோடு ஜெபிக்கவில்லையே என்று புலம்ப வேண்டாம்.
தேவன் நமது கையிலே ஜெபம் என்கிற மிகப்பெரிய ஆவிக்குரிய ஆயுதத்தை கொடுத்திருக்கிறார் .அதை பயன்படுத்தி நிச்சயமாக தேசத்திற்கு வரக்கூடிய ஆபத்தை தடுத்து நிறுத்துவோம்.
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஊக்கமாக வரக்கூடிய தேர்தலுக்காக ஜெபிப்போம்.
நம்முடைய குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால் எவ்வளவு அக்கறையோடு ஜெபிப்போமோ அதைவிட நாம்
வாழ்கின்ற இந்த தேசத்தை குறித்த ஒரு மிகப்பெரிய பாரத்தோடு, அக்கறையோடு வரக்கூடிய தேர்தலுக்காக ஜெபிக்க உங்களை அன்போடு அழைக்கிறேன்.
ஒருநாளையும் தவற விட வேண்டாம். யாரையும் பார்க்க வேண்டாம் .
நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.
வரக்கூடிய தேர்தலுக்காக ஜெபம் என்கிற மிகப்பெரிய போராட்டத்தை ஏறெடுக்க உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தேவன் விசுவாசிகளாகிய நம்மைத்தான் நம்பி இருக்கிறார் (தொடரும்)