Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

விசுவாசிகளை குறை சொல்லாதீர்கள்.
உங்கள் சிந்தனைக்கு:

விசுவாசிகளை குறை சொல்லாதீர்கள்.

Who is responsible for the Biblical illiteracy of the believer.

விசுவாசிகளின் வேத அறியாமைக்கு யார் காரணம்?
இன்றைக்கு பலபேர் விசுவாசிகள் வேத தியானத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு விசுவாசிகளின் உலகத்தை நோக்கிய பார்வையை சுட்டிக் காட்டுகிறார்கள்.

விசுவாசிகள் ஆசீர்வதிப்பவரை விட ஆசிர்வாதத்தை நோக்கி பார்க்கிறார்கள்.
சுகத்தை கொடுப்பவரை விட சுகத்தை நோக்கி ஓடுகிறார்கள் என்று பலவிதமான குற்றச்சாட்டுகளை விசுவாசிகளின் மீது தெளிக்கிறார்கள்.

இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.
இதற்குக் காரணம் சபையும் அதை நடக்கின்ற போதகர்கள்தான்.
ஒரு போதகன் தன்னிடத்தில் வருகின்ற ஒரு விசுவாசிக்கு முதல் முதலில் சொல்லிக் கொடுக்கின்ற பாடம் வேதத்தை எப்படி படிப்பது என்பது தான் .
வேதத்தை எப்படி புரிந்து கொள்வது ,எப்படி படிக்கக்கூடாது ,எப்படி தியானிக்க கூடாது, எது சரியான உபதேசம் ,எது முக்கியத்துவம் இல்லாத உபதேசம், எது அடிப்படை உபதேசம், என்கிற பலlகாரியங்களை ஒரு விசுவாசிக்கு ஆரம்பம் முதலே போதித்தால் அவன்ஒரு காலும் உலகத்தை நோக்கி ஓட மாட்டான்.

தனக்குத் தெரிந்த அத்தனை வேதத்தை பற்றிய அறிவையும் ஒரு போதகன் தன்னுடைய சபைக்கு போதிக்க வேண்டும்.

எந்த போதகன் தன்னுடைய சபையில் கிரமமாக அக்கறையோடு, பாரத்தோடு வேத அறிவை புகட்டுகிறானோ அந்த சபை உலக நாட்டங்களை தேடி ஓடாது. தவறான உபதேசங்களில் சிக்கி கொள்ளாது.
The pastors should conduct regular Bible study with burden.
வேத பாடம் என்ற பெயரில் சுகமளிக்கும் செய்திகளையோ, பிரசங்கங்களையோ, அல்லது தங்களது சபை உபதேசங்களையோ போதிக்கக்கூடாது.
வேத பாடம் என்றால் வேத பாடமாக தான் இருக்க வேண்டும்.
போதகர்கள் சரியான முறையில் ஆண்டவரை அறியக் கூடிய வழிமுறைகளை, அடிப்படை இறையியல் கோட்பாடுகளை, போதிக்க வேண்டும்
வேதத்தை படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை உண்டு பண்ண வேண்டும்.
சிறந்த நூல்களை, வேத வியாக்கியானங்களை,
ஆராய்ச்சி வேதங்களை அறிமுகப்படுத்த வேண்டும்

புதிய ஏற்பாட்டில் ஆரம்ப காலங்களில் எத்தனை இறையியல் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டது? ஒன்றுமில்லையே.


ஆனால் அவர்கள் வசனத்தில் வளர்ந்தார்கள்,வசனம் விருத்தியடைந்தது என்று அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் பல இடங்களில் வருகிறது. வசனங்கள் விருத்தி அடையும் போது தான் ஆண்டவரை அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

விசுவாசியை வசனத்தில் வளர்க்க வேண்டும் இதுதான் புதிய ஏற்பாட்டின் ஆரம்ப கால சபை வளர்ச்சிக்கு காரணம். கீழே உள்ள வசனங்கள் இதற்கு ஆதாரம்

"தேவவசனம் விருத்தியடைந்தது. சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று. ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்."
அப்போஸ்தலர் 6:7

"தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. "
அப்போஸ்தலர் 12:24

"இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது."

அப்போஸ்தலர் 19:20.

இந்த இடத்தில் எனக்கு மிக மிகவும் பிடித்த வேத பண்டிதர்களின் ஒருவரான வில்லியம் பார்க்கிளே அவர்களின் வாழ்நாள் விருப்பத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
My desire is to make scholarship available for the layman so that he may know Him better , his Bible WILLIAM BARCLAY
,"என்னுடைய அறிவை சாதாரண மக்களுக்கு தேவனையும் அவருடைய வேதத்தையும் அறிவதற்கு கொடுக்க விரும்புகிறேன்."

இப்படிப்பட்ட சிந்தனையில் பத்து சதவீதமாவது நம்முடைய போதர்களுக்கு இருந்தால் சபை விசுவாசிகள் என்றைக்கோ வேதத்தில் ஆழ்ந்த கருத்துக்களையும் இறையியல் தத்துவங்களையும் அறிந்திருக்க முடியும். அதை செய்யத் தவறியது யார் என்பதை உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.
வில்லியம் பார்கிளே போன்ற தேவ மனிதர்கள்ஒரு ‌சிலராவது‌ தமிழகத்தில் எழும்ப வேண்டும். அப்படி எழும்பாத வரைக்கும் சபையினுடைய உண்மையான எழுப்புதல் கானல் நீரே.
சிறிய சபையோ பெரிய சபையோ
போதகர்கள் தங்கள் கீழ் உள்ள விசுவாசிகளை வசனத்துக்கு நேராக நடத்தும் போது அவர்கள் நிச்சயமாக வசனத்தில் வளருவார்கள்‌.
எனவே இப்படிப்பட்ட விசுவாசிகளை வளர்க்காத குற்றம் போதர்களை சாருமே தவிர விசுவாசிகளை அல்ல..
இறுதியாக ஒரு வார்த்தை
ஆதித் திருச்சபையில் கீழே உள்ள வசனத்தில் சொல்லப்பட்ட அந்த தீர்மானத்தை இன்றைக்கு போதகர்கள் பின்பற்றினாலே ஒழிய விசுவாசிகளின் வளர்ச்சிக்கு வேறு வழியே இல்லை.
அதுவரைக்கும் தயவுசெய்து போதகர்களே விசுவாசிகளை குறை சொல்லாதீர்கள்
"நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்"
அப்போஸ்தலர் 6:4
இந்த வசனத்தின் படி வேத வசனத்தை போதிப்பது தான் ஒரு போதகனுடைய முதல் கடமை அதை செய்ய தவறும் போது எல்லாமே தலைகீழாக மாறிவிடும் .

இந்த வசனம் தான் ஒவ்வொரு போதகரின் வாழ்நாள் லட்சியமாக இருக்க வேண்டும். கர்த்தர் மகிமைப்படுவாராக