யாக்கோபு - ஏமாற்றப்படுவதின் வலி
20 ஆண்டுகளுக்குப் பிறகு பெத்தேலை நோக்கி யாக்கோபு தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து செல்கிறான்.செல்லும் வழியில் தான் ஏமாற்றிய அண்ணனை பார்க்க வேண்டிய சூழ்நிலை. தேவனுடைய கட்டளையின்படி சென்றாலும் தன் சகோதரனை ஏமாற்றிய அந்த வேதனை அவனை விட்டு நீங்கவில்லை. ஏனென்றால் தானும் லாபன் மூலமாக 20 ஆண்டு காலமாக ஏமாற்றப்பட்ட அந்த அனுபவத்தை அவன் மறக்கவில்லை . ஏமாற்றப்படுவதின் வலி என்ன என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது.எனவே அண்ணன் ஏசாவை பிரியப்படுத்தும்படியாக பல வெகுமதிகளை தன்னுடைய வேலைக்காரர்கள் மூலமாக அளிக்க முன்வருகிறான். அவனைக் கண்டு பயப்படுகிறான். ஒருவேளை ஏசா தன்னை தாக்கினாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள திட்டம் தீட்டுகிறான். தன் சகோதரனை ஆண்டவன் என அழைக்கிறான். திரும்பவும் தேவனை நோக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ளும்படியாக கெஞ்சுகிறான். தேவனுடைய பாதுகாப்பை யாக்கோபு பெற்றிருந்தாலும் தன் அண்ணனுக்கு சேர வேண்டியதை இரண்டு முறை தட்டிப் பறித்த அந்த காரியத்தை குறித்து அவனிடத்தில் உள்ள குற்ற உணர்வு அவனை மிகவும் பாதித்தது. அதனால் தான் மிகவும் தன்னைத் தாழ்த்தி ஏசாவிடம் சமாதானத்தை தேடினான். இதுதான் தேவனை அறிந்த மனிதனின் உணர்வாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு நாம் இழைத்த அநீதியைக் கண்டு கடைசி மட்டும் மனம் வருந்தக்கூடிய சிந்தையை நாம் பெறாவிட்டால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை கல்மனதை போன்ற வாழ்க்கையாகும். தேவன் நம்மை மன்னித்து இருக்கலாம் .ஆனாலும் ஏமாற்றிய நமக்கு ஏமாற்றப்பட்டவனை குறித்துள்ள ஒரு மன வருத்தம் நிச்சயமாக கடைசி மட்டும் இருக்க வேண்டும். அந்த வகையில் யாக்கோபும் மிகச்சிறந்த ஒரு மனிதனாக
காணப்படுகிறான். இது என்னுடைய பார்வை.