இமைப்பொழுதில் தேவன் நமக்கு அருளும் ஆசிர்வாதங்கள்.
உங்கள் சிந்தனைக்கு!
இமைப்பொழுதில் தேவன் நமக்கு அருளும் ஆசிர்வாதங்கள்.
மறுபடியும் பிறந்தஎல்லோருடைய வாழ்க்கையிலும் இரட்சிப்பின் அனுபவம் மிக முக்கியமான நிகழ்வாகும்.
நாம் எடுத்த அந்த தீர்மானம் நம்பமுடியாத விளைவுகளை நாம் வாழ்வில் ஏற்படுத்தியிருப்பதை நாம் அறியாமல் இருப்பதுதான் மிக பெரிய பரிதாபம்.
நாம் மறுபடியும் பிறக்கும் அந்த நாளில் ஆண்டவர் செய்யும் விவரிக்க முடியாத செயல்களை இப்போது தியானிக்கலாம்.
நம் பாவங்களை மன்னித்து நம்மை குற்றமில்லாதவராக அறிவிப்பதோடு ஆண்டவர் தமது நீதியை நமக்கு அளித்து நம்மை அவருடைய பிள்ளைகளாக்கி நம்மை அவருக்கு சொந்தமாக்கினார்(யோவான் 1:12, ரோமர் 5:1,1 கொரி 6:20)
நாம் இயேசுவுக்குள் பூரணமாயிருக்கிறோம்(கொலோ 1 :20)
நாம் தேவனோடு நேரடியாக உறவாட நமக்கு உரிமையை அளித்திருக்கிறார்(.எபே2:18.)
நாம் தேவனுடைய ஆசாரியராக நியமிக்கப்பட்டிருக்கிறோம் (1 பேது 2:5)
நாம் இருளின் ஆதிக்கத்தில் (இராச்சியத்தில்) இருந்து விடுதலை பெற்று பரலோக இராச்சியத்தின் குடிமக்களாக மாற்றப்பட்டிருக்கிறோம் (பிலி3:20)
அவர் நம்மை உன்னதங்களில் இயேசுவோடுகூட உட்கார வைத்திருக்கிறார்.
இப்படி சொல்லிகொண்டே போகலாம் .
இந்த ஆசீர்வாதங்கள் எல்லாம் ஓர் நொடிப்பொழுதில் நமக்கு வந்து சேருகிறது,
ஒரே வினாடியில் நம் நிலை, நம் உயர்வு, நம் ஆசிர்வாதம், நாம் நினைத்து பார்க்கமுடியாத அளவில் உயர்த்தப்படுகிறது. தேவனுடைய பிள்ளை என்ற அதிகாரத்தோடு நாம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட நிலைக்கு (fully protected) நம்மை தேவன் உயர்த்துகிறார்.
இந்த இரட்சிப்பை நாம் எவ்வளவு அருமையாக கருதி பாதுகாக்க வேண்டும்.அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நமது இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுவோம் .
எசேக்கியேல் சண்முகவேல்