Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுப்போம்
உங்கள் சிந்தனைக்கு:
நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுப்போம்


யூதர்களுடைய வரலாற்றில் யாக்கோபு மிக முக்கியமானவன். அவன் தான் இஸ்ரவேல் என்றுபெயர் மாற்றம் செய்யப்பட்டவன். யாக்கோபின் வம்சத்தில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தார். இவ்வளவுஆசீர்வாதங்களைபெற்றிருந்தாலும் அவன் செய்த அநீதிக்கு தேவன்அவனை தண்டிக்காமல் விடவில்லை.
எந்த வழிமுறையின் மூலமாக ஏசாவை
ஏமாற்றினானோ அதே வழிமுறையின் மூலமாக
லபான் மூலமாக அவன் ஏமாற்றப்பட்டான்.
ஆள்மாறாட்டம் என்கிற ஒரு கருவியைப் பயன்படுத்தி தன் தகப்பனுடைய ஆசீர்வாதத்தை அவன் பெற்றுக்கொண்டான்.
அதே ஆழ்மாறாட்டத்தின் மூலமாகத்தான் யாக்கோபுக்கு ராகேலுக்கு பதிலாக லேயாள் கொடுக்கப்பட்டாள். தாயும் மகனும் சேர்ந்து
தகப்பனையும் மூத்த சகோதரனையும்
வஞ்சித்தார்கள்.
ஆனால் யாக்கோபு லாபான் லேயாள்
ராகேல் ஆகிய மூன்றுபேர் இணைந்து நடத்தியநாடகத்தால் வஞ்சிக்கப்பட்டான். யாக்கோபு லேயாள்
திருமணத்தில் ராகேலுக்கும், லேயாளுக்கும் பங்கு இல்லை என்று நாம் நிராகரித்து விட முடியாது.
They might be mute and silent spectators of the drama enacted byLaban
தேவன் நீதியை சரி கட்டுகிற தேவன்.

எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும்
எவ்வளவாகத் தேவனால் பயன்படுத்தப்பட்டாலும்
அவர்கள் செய்த அநீதிக்கு இந்த உலகத்திலேயே
அவர்களுக்குத் தேவன் தண்டனையைக் கொடுப்பார்.
தேவனுடைய நீதி பரிபாலனத்தில் எல்லோரும் சமமே.
புதிய ஏற்பாடு விசுவாசிகளுக்கு நாம் செய்த தவறுகளுக்குப் பாவங்களுக்குத் தண்டனை வழங்கப்பட விட்டாலும் சிட்ச்சை வழங்கப்படும்.(Chastening)

மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
கலாத்தியர் 6:7. நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அற்பமாக எண்ணாமல் அவமதிக்காமல் அதைப் பயன்படுத்தி பரிசுத்தத்தில் வளர வேண்டுமேயல்லாமல் கிருபையை பாவம் செய்வதற்கான அனுமதியாகக் கருதி வாழ்கின்ற எவரும் எந்த விசுவாசியும் அதற்கு ஏற்றத் தேவனுடைய சிட்ச்சையை தவிர்க்க முடியாது. அதுவும் பரிசுத்தத்தை போதிக்கின்ற தலைவர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்