Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

மற்றவருடைய உபதேசங்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
உங்கள் சிந்தனைக்கு:

மற்றவருடைய உபதேசங்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு உபதேசத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு.

இயேசு கிறிஸ்து சபைக்காக மட்டும் மரித்தாரா முழு உலகத்துக்கும் மரித்தாரா?

நரகம் என்பது அவிசுவாசிகளுக்கான நித்திய தண்டனையா?
அவர்களை நித்தியத்தில் கடவுள் அழித்து விடுவாரா?

இயேசு கிறிஸ்து வருகை என்பது
இரகசிய வருகை மற்றும் பகிரங்க வருகை என்று இரண்டும் சேர்ந்ததா? அல்லது
ஒரே ஒரு வருகையா?

ஒரே ஒரு நியாயத்தீர்ப்பா
அல்லது இரண்டு நியாயத்தீர்ப்பா?

ஆயிரம் அரசாட்சி எழுத்தின்படி நடக்குமா அல்லது நடக்காதா?
ஆயிரம் வருடம்அரசாட்சி எப்பொழுது நடக்கும்?

மகா உபத்திரவ காலம் ரகசிய வருகைக்கு முன்பாக நடக்குமா அல்லது பின்பு நடக்குமா?

விசுவாசி தன்னுடைய இரட்சிப்பை இழக்க முடியுமா முடியாதா?

சபைகளில் தலைமை பொறுப்பைப் பெண்கள் ஏற்கலாமா ஏற்க கூடாதா?

சபையில் பெண்கள் ஆண்களுக்கும் போதிக்கலாமா?

விசுவாசிகள் மற்றவர்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கலாமா கொடுக்கக் கூடாதா?

முழு நேர பணியாளர்கள் விசுவாசிகள் என்ற பாகுபாடு வேதத்தின் படி சரியா?
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப் பற்றி எல்லாம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் விவாதித்து விவாதித்து அலுத்து போய்விட்டது‌.
அவரவர்கள் தங்கள் நிலையில் இறுதியாக இருக்கிறார்கள்.

ஒருவர் மற்றொருவரை எதனுடைய அடிப்படையில் அன்பு கூறுகிறார்கள் அல்லது நேசிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள்?

நான் நம்புவது இயேசு கிறிஸ்து என் பாவங்களுக்காக மரித்தார், நான் மறுபடியும் பிறந்தவன்.
நான் அவருடைய வசனத்தில் வளர்ந்து பரிசுத்தத்தில் ‌ வளர்ச்சி அடைந்து ஊழியம் செய்து‌ ஆண்டவருடைய வருகைக்காகக் காத்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.

உபதேசங்களை அறிந்து கொள்வதில் தவறில்லை அதில் நமக்குச் சமநிலை வேண்டும் அதில் அடித்துக் கொள்ளக் கூடாது.
நான் சரி, நீ தவறு என்கிற மனப்பான்மை ஒழித்து விட்டு மற்றவர் கருத்தை மதித்து அவர்களை நேசிக்க வேண்டும் ‌.

என் கருத்து வேறாக இருந்தாலும் அவர்களின் உணர்வை நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் ஆவிக்குரிய முதிர்ச்சி என்பேன்.
ஏனென்றால் அவர்களும் இயேசுவின் இரத்தத்தால் என்னைப் போல மீட்டெடுக்கப்பட்டவர்கள்.
இயேசு கிறிஸ்து அவர்களையும் என்னைப் போலவே தம்முடைய பிள்ளைகளாக மாற்றி இருக்கிறார் என்கிற புரிதல் அவசியம்.
அடிப்படை உபதேசங்களில் சமரசம் கூடாது. மற்ற காரியங்களில் அனுசரணை தேவை.
இதுதான் சமநிலை கிறிஸ்தவம்.