எல்லாம் தெய்வ மகிமைக்கே
உங்கள் சிந்தனைக்கு:
தகப்பனான ஆபிரகாமும் மகனான ஈசாக்கும் ஒரே வகையான(Same Type) இரண்டு பிரச்சனைகளை சந்தித்தார்கள். ஆபிரகாமும் ஈசாக்கும் பஞ்சத்தை சந்தித்தார்கள். ஆபிரகாம் ஈசாக்கும் தங்களுடைய மனைவி அழகுள்ளவர்களாக இருப்பதினால் தங்களுக்கு வந்த ஆபத்தை சந்தித்தார்கள். ஆனால் இரண்டு பேரும் இரண்டு வகையில் அந்த பிரச்சினைகளை சந்தித்தார்கள். தேவனும் அவர்களை இரண்டு வகையில் அவர்களோடு இடைப்பட்டார். ஆபிரகாம் பஞ்சத்திற்கு பயந்து எகிப்துக்கு போவதை தேவன் தடுக்கவில்லை. ஆனால் ஈசாக்கை தடுத்தார்.தங்கள் மனைவி அழகுள்ளவர்களாக இருப்பதினால் தங்களை மனைவியினுடைய சகோதரர்கள் என்று இருவருமே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். இவர்கள் இரண்டு பேருமே இந்தப் பிரச்சினையை சந்தித்த விதங்கள் வேறு .இந்த காரியங்களில் தேவன் அவர்களை நடத்தின விதமும் வேறு .எனவேதேவன் எல்லோரையும் ஒரே மாதிரி, ஒரே விதத்தில் நடத்த மாட்டார் . அவர்களுடையஆவிக்குரிய அனுபவம், முதிர்ச்சி இவைகளின் அடிப்படையில் தான் அவர்களை தேவன் நடத்துவார், .எனவே தேவனை நோக்கி ஏன் ஆண்டவரே இந்தப் பிரச்சனையில் என்ன இப்படி நடத்தினீர்,? அவர்களை ஏன் அப்படி நடத்த வேண்டும்! என்று கேள்வி கேட்க நமக்கு உரிமை இல்லை. எல்லாம் தெய்வ மகிமைக்கே