ஆபிரகாம் ஒரு நல்ல குடும்பத் தலைவன்
ஆபிரகாம் ஒரு நல்ல குடும்பத் தலைவன் .
இதற்கு இரண்டு காரியங்களை குறிப்பிடலாம். ஒன்று தன்னுடைய மகன் ஈசாக்குக்கு கர்த்தரின் சித்தத்தின்படி தேவனுக்கு பயந்து தன்னுடைய இனத்தில் இருந்து மணப்பெண்ணை தெரிந்து கொள்ள அவன் முயற்சி எடுத்து அதில் வெற்றி கண்டான்.
இதனால் மேசியா வருவதற்கான ஒரு சரியான இணைப்பை உண்டு பண்ணினான்.இதை ஒரு மிகப்பெரிய காரியமாக பார்க்கிறேன்.
ஈசாக்கு அவன் தன் வழியே சென்று தனக்கு இஷ்டமான பெண்ணை தெரிந்து கொள்ளாதபடிக்கு ஆபிரகாம் செய்த இந்த காரியம் தடுத்தது.
அடுத்தபடியாக தான் இறக்கும் முன்பாகவே ஈசாக்குக்கும் தனது மறுமனையாட்டியான கேத்தூராள் மூலமாக பிறந்த குழந்தைகளுக்கும் சொத்தை பகிர்ந்து கொடுப்பதில் அவன் தெளிவாக இருந்து யாருக்கு சொத்தை கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு சொத்தை கொடுத்து யாருக்கு வெகுமதிகளை கொடுக்க வேண்டுமோஅவர்களுக்கு வெகுமதிகளை கொடுத்து ஒரு சமாதானமான தீர்வை கொடுத்து ஒரு நிம்மதியான வாழ்க்கையை முடித்தான்.ஆதி25:5,6
3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சகோதரர்களுக்கிடையில் சொத்து பிரச்சனை வராதபடி பார்த்துக் கொண்ட முதல் குடும்பத் தலைவன் ஆபிராகாம்.
இந்த வழியை தகப்பன்மார்கள் சரியாகப் புரிந்து கொண்டு குடும்பத்தில் பிரிவினைகள் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் .
எவ்வளவுதான் ஆவிக்குரிய மனிதர்களாக ஊழியம் செய்பவர்களாக காணப்பட்டாலும் குடும்பத் தலைவன் என்கிற பொறுப்பில் இருந்து ஒரு தகப்பன் தன் கடமையை சரியான முறையில், நியாயமான முறையில் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறான். திருமண காரியங்களில் சொத்துக்களை பிரிப்பதில் ஒரு தகப்பன் தேவனுடைய சித்தத்தை அறிந்து செயல்பட தேவன் விரும்புகிறார்.
அதில் தவறும் போது தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் ஏற்படும். ஆபிரகாம் நமக்கு நல்ல உதாரணம்
. EZEKIEL SHANMUGAVEL