ஆண்டவரை அறிந்த ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் இணைப்பதற்கான முக்கிய நோக்கம்:
உங்கள் சிந்தனைக்கு:
ஆண்டவரை அறிந்த ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் இணைப்பதற்கான முக்கிய நோக்கம்:
அவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு பக்தியுள்ள அடுத்த சந்ததியை உருவாக்குவது தான். இதுதான் தேவனுடைய பார்வையில் மிக மிக முக்கியமான நோக்கம்.
இந்த நோக்கத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள் தவறும்போது அவர்களைத் தேவன் இணைத்த நோக்கம் ஒருபோதும் நிறைவேறாமல் போய்விடும்.
ஆபிரகாமை மிகப்பெரிய வாக்குத்தத்தங்களோடு தேவன் அழைத்தார். அதற்காக அவர் சும்மா இருக்கவில்லை. அதே வேளையில் தன்னுடைய மகன் ஈசாக்குக்கு, தேவனுக்கு சித்தமான இடத்தில் பெண் எடுக்க அவர் முயற்சி செய்து அதில் வெற்றி கண்டார். அந்த ஆவிக்குரிய தொடர் ஓட்டத்தில் இவருடைய பணி மிக முக்கியமானது. அதேபோல ஈசாக்கும் ரெபேக்காளும், யாக்கோபுக்கு தேவனுக்கு சித்தமான இடத்தில் பெண் கொள்ளும்படியாக அவனை லாபான் வீட்டுக்கு அனுப்பிய காரியம் மிக முக்கியமானது.
ஏசாவைப் போல் வழி விலகிப் போய் விடாமல் கர்த்தருக்கு சித்தமான ஒரு இடத்தில் யாக்கோபை அனுப்பிய அந்தச் செயல் அவர்கள் இந்த ஆவிக்குரிய தொடர் ஓட்டத்தில் தங்களுடைய பங்கை நிறைவேற்றினார்கள். பெற்றோர்களுடைய கடமை என்னவென்றால், பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய சத்தியங்களை சொல்லிக் கொடுக்கலாம். தங்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அவர்களுக்குக் கடத்தலாம். ஆனால் மிக முக்கிய கடமை என்னவென்றால் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கர்த்தருக்கு சித்தமான இடத்தில் திருமணம் முடித்துக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். "இது பிள்ளைகளுடைய விருப்பம்" என்று சொல்லித் தங்கள் கடமைகளைத் தட்டி கழிக்க முடியாது. அடுத்த சந்ததியை உருவாக்குவதில் திருமண காரியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் பெற்றோர்களுடைய கடமை மிக முக்கியமானது.
எசேக்கியல் சண்முகவேல்