Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

கீழ்படிதல்
:
கீழ்படிதல்
இஸ்ரவேல் ஜனங்கள் கானானை சென்றடைவதற்கு கர்த்தர் வழிநடத்தின விதத்தை எண்ணாகமம் புத்தகம் ஒன்பதாவது அதிகாரத்தில் பார்க்கலாம்

இஸ்ரவேல் ஜனங்கள் கானன் சென்றடையும் வரைக்கும் அவர்கள் வனாந்திர வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

தேவன் வாக்குத்தத்தம் பண்ணின இடத்தை அடைவதற்கு ஏறக்குறைய 40 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்கள்.

அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே தேவன் அவர்களை இந்த வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுத்தார்.

ஆனாலும் அந்த வாழ்க்கையிலே தேவன் அவர்களை நடத்தினார்.
பொதுவாக பகலிலே மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிக்கொண்டிருக்கும். சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாகும்.
அது விடியற்காலமட்டும் இருக்கும்.
எண்ணாகமம் 9:15
இப்படி நித்தமும் இருக்கும்.

பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருக்கும்
எண்ணாகமம் 9:16

அதே வேளையில்
மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்.

மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.
எண்ணாகமம் 9:17
மேகம் என்பது கர்த்தருடைய வழிநடத்துதலை காண்பிக்கும்.
இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய வழிநடத்துதலின்படி கானானுக்குள் சென்றார்கள்.

நாமும் கூட இந்த ஆவிக்குரிய கூடார பயணத்தில் கர்த்தருடைய வழி நடத்துதல் இன்றி நாம் பரம கானானை அடைய முடியாது.
அவர்கள் அந்த வழி நடத்துதலுக்கு கீழ்ப்படிந்த காரணத்தினால் இலக்கை அடைய முடிந்தது.

இன்றைக்கு நமக்கு பரிசுத்த ஆவியானவர் வழிகாட்டியாக இருக்கிறார். ரோம் 8:26,27

பரிசுத்த வேத வார்த்தைகள் நமக்கு வெளிச்சமாக இருக்கிறது.சங் 119:105

நமக்காக பரிந்து பேசுகிற பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்து இருக்கிறார்.

இஸ்ரவேல் மக்கள் தரிசித்து நடந்தார்கள்.
ஆனால் நாம் விசுவாசித்து நடக்கிறோம்.

நமக்கு வெளிச்சமாய் இருக்கிற வேத வார்த்தைகள் ஆண்டவரை அறியாத மக்களுக்கு இருளாக காணப்படும்.
வனாந்தரத்தில் இதுதான் நடந்தது.
இஸ்ரவேல் மக்களுக்கு உண்டானவெளிச்சம் எகிப்தியர்களுக்கு இருளாக காணப்பட்டது.யாத் 14:29,30.

நாம் எந்த அளவுக்கு அவருடைய சத்தத்திற்கு, வார்த்தைக்கு, கீழ்ப்படிந்து நடக்கிறமோ, விசுவாசித்து வாழ்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கை வெற்றியுள்ள வாழ்க்கையாக மாறும்.

இந்த அதிகாரத்தில் காணப்படும் ‌முக்கியமான ஒரு குறிப்பு என்னவென்றால், அது எண்ணா 9:21ம் 23ம் தான்.

" பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள். "
எண்ணாகமம் 9:21

கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்.
கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்,
எண்ணாகமம் 9:23

கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதற்கு நேரம் காலம் என்று எதுவும் கிடையாது.

கீழ்ப்படிதலை ஒத்தி வைக்கவும் கூடாது.

கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிய நமக்கு திறமைகள் தேவையில்லை .
அவருடைய கட்டளைக்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

"It is not our ability .it is our availability."
It is not our offering. It is our commitment and sacrifice.
பலிகளை பார்க்கிலும் கீழ்ப்படிதலே முக்கியம். இந்த வனாந்திர வாழ்க்கையில் நமது கையில் உள்ள முக்கியமான திறவுகோல் கீழ்ப்படிதல் என்பது. தேவனுக்கு,தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிதல் என்கிற திறவுகோல் மூலமாக நாம் வெற்றி பயணத்தை சுலபமாக மேற்கொள்ளலாம். கர்த்தர் மகிமைப்படுவாராக