Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

யாக்கோபின் மிகப்பெரிய தவறு .
உங்கள் சிந்தனைக்கு:
யாக்கோபின் மிகப்பெரிய தவறு .
யாக்கோபு தன் அண்ணனுடைய பிறப்புரிமையை தந்திரமாக பெற்றது தவறு. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அவன் தாயின் சொல்லைக் கேட்டு, தாயினுடைய வற்புறுத்தலுக்கு அடிபணிந்து, தவறான வழிகளை பின்பற்றி, தன் தகப்பனையே ஏமாற்றி, தன்னுடைய அடையாளத்தை மாற்றி, ,பொய்களுக்கு கடவுளின் பெயரை இழுத்து, கடவுளின் பயம் இல்லாமல் தகப்பனின் ஆசிர்வாதத்தை பெற்றதுதான் மிகப்பெரிய தவறு.
தாய் சொல்கிற காரியம் மிகப்பெரிய ஏமாற்று வேலை என்று தெரிந்தும், அதை தடுத்து, நிறைவேற்றாமல் இருக்க மனமில்லாமல் ஆசிர்வாதத்திற்காக கடவுளின் நேரத்திற்காக காத்திராமல் காலத்திற்கு முந்தி மனித முயற்சியில் தகப்பனின் ஆசிர்வாதத்தை பெற முயற்சித்தது அவனுடைய மிகப்பெரிய வீழ்ச்சி.
கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு காரியம் என்னவென்றால் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும், ஆவிக்குரிய தகப்பன்மார்கள் என்று சொல்லிக் கொண்டாலும், தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் வேதத்திற்கு புறம்பாக, சட்டங்களுக்கு மாறாக செயல்பட நிர்பந்திக்கும் எந்த செயலையும் நாம் எதிர்த்து நிற்க தயாராக இருக்க மன தைரியம் வேண்டும். இல்லை என்றால் நாமும் எப்படி யாக்கோபு லாபான் மூலமாக ஏமாற்றப்பட்டனோஅதற்கு பன்மடங்கு நாமும் ஏமாற்றப்படுவோம். கர்த்தர் நீதியுள்ளவர்

.