Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

தேவனுடைய திட்டத்தை தன் கையில் எடுத்த ரெபேக்காள்.
தேவனுடைய திட்டத்தை தன் கையில் எடுத்த ரெபேக்காள்.

குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போதே அவர்களைப் பற்றி தேவனிடம் விசாரித்து தெளிவான வெளிப்பாட்டை பெற்றுக் கொண்டவள் இந்த ரெபேக்காள். இளையவன் மூத்தவனை ஆண்டு கொள்வான் என்பதை தெளிவாக அறிந்தவள்.
ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்காமல் ஈசாக்கு ஈசாவை ஆசீர்வதிக்க போகிறான் என்பது அறிந்து யாக்கோபை வற்புறுத்தி, பொய் சொல்ல வைத்து, தன் கணவனை ஏமாற்றி, அதற்குரிய முழு பழியையும் தான் ஏற்றுக் கொள்வதாக சொல்லி, தேவனுடைய காலத்திற்கு முந்தி யாக்கோபை Promote செய்ய முயற்சி செய்தாள் .
விளைவு அந்த முன்னேற்றத்தை கண்ணால் கூட பார்க்க முடியவில்லை.
யாக்கோபை வெளியேற்றின பிறகு தன் அன்பு மகனை தான் மரிக்கு மட்டும் பார்க்கவில்லை.

கற்றுக் கொள்ளக்கூடிய காரியம்.
மனித ஞானத்தின் படி மனித உணர்வின் அடிப்படையில் நாம் யாருக்காவது உதவி செய்தால் அது நமக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடும்.
இரண்டு நாம் அவர்களுக்கு செய்யும் உதவியின் பலனை அனேக நேரங்களில் நாம் பார்க்க முடியாமல் போய் விடும்.
உதவி,(Help,) செய்வது என்பது வேறு ,ஒருவனை மனித ஞானத்தின் படி முன்னேற்றுவது என்பது வேறு.
உதவி செய்வது நம்முடைய கடமை. மற்றவர்களை முன்னேற்றுவது தேவனுடைய உரிமை.
We can only help other.But it is God who can promote us.