ஆரோனின் மௌனமும் மோசேயின் அமைதியும்
ஆரோனின் மௌனமும் மோசேயின் அமைதியும்
படிக்க லேவியராகம் 10வது அதிகாரம்.
ஆரோன் பேசாதிருந்தான்.
லேவியராகமம் 10:3
மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.
லேவியராகமம் 10:20
ஆசரிப்புக் கூடாரம் உருவாக்கப்பட்டு முதல் பிரதான ஆசாரியன் ஆரோன் தனக்காகவும் ,தன் ஜனங்களுக்காகவும் பலிகளை செலுத்தி அந்த பலிகளை ஆண்டவர் ஏற்றுக்கொண்டு அதன் நிமித்தம் ஆரோன் ஜனங்களை ஆசீர்வதித்தான். அந்த நிகழ்வு மிகப்பெரிய ஒரு துவக்கத்தின் ஆரம்பம்.
கர்த்தரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு பலிபீடத்தில் இருந்த தகன காணிக்கைகளையும் கொழுப்பான பாகங்களையும் பட்சித்தது .
மக்கள் மகிழ்ச்சியினால்
ஆர்ப்பரித்தார்கள்.
மிகப்பெரிய சந்தோசத்தோடு முடிந்திருக்க வேண்டிய அந்த நாள்
ஆனால் அடுத்த சில நொடிகளில் ஆரோனுடைய மகன்களான நாதாபும் அபியூவும் கர்த்தரால் அனுமதிக்க படாத நெருப்பை கர்த்தருக்கு செலுத்திய படியினால் கர்த்தருடைய சன்னிதானத்தில் இருந்து புறப்பட்ட நெருப்பு அவர்களை எரித்து போட்டது.
தன்னுடைய இரண்டு மகன்கள் இறந்த அந்த வேளையில் தான்
ஆரோன் பேசாமல் இருந்ததாக பார்க்கலாம்.
ஆரோன் பிரதான ஆசாரியனாக இருந்த காரணத்தினால் அவன் மகன்கள் இறந்த துக்கத்தை வெளிப்படுத்த அவனுக்கு அனுமதி இல்லை.லேவி 10:7
மகன்களுடைய பிணத்தை கூட அவனுடைய உறவினர்கள்தான் எடுத்துச் சென்றார்கள். ஆரோன் தன் உணர்வுகளை எல்லாம் அடக்கி தன் துக்கத்தை வெளிப்படுத்தவில்லை. காரணம் அது தேவனுடய கட்டளை.
Aaron was not allowed to mourn the death of his sons.
அதே வேளையில் அந்த நாளில் இன்னொரு நிகழ்வும் நடந்தது.
பாவ நிவாரண பலிக்காக கொண்டுவரப்படும் ஆடு பலியிடப்பட்டு அதனுடைய இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டுவரப்படாவிட்டால்
அதை ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிட வேண்டும்.
அதே வேளையில்
எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்
லேவியராகமம் 6:26,30
ஆனால் மோசே பாவ நிவாரண பலிக்காக கொண்டுவரப்பட்ட ஆடு பலியிடப்பட்டு அந்த ரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்கு கொண்டுவரப்படாமல் எரிக்கப்பட்ட நிலையிலே இருந்ததை பார்த்தான். அதை ஆரோனும் அவனுடைய குமாரர்களும் சாப்பிட்டிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அதை சாப்பிடவில்லை.
லேவி10:16-30
இதனால்மோசே ஆரோன் மீது கோபம் கொண்டான்
"பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே, சபையின் அக்கிரமத்தைச் சுமந்துதீர்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவ நிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே என்று மோசே கூறினார்.
லேவியராகமம் 10:17
அதற்கு ஆரோன்கொடுத்த பதில்
"அவர்கள் தங்கள் பாவநிவாரண பலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே, பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால் அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ"
லேவியராகமம் 10:19
இந்த பதிலைகேட்டு தான் மோசே அமைதியாக இருந்தான்.
இதன் மூலம் நாம் அறியக்கூடிய சத்தியங்கள்.
தேவனுடைய ஆசரிப்பு கூடாரத்தில் (Anointing) தேவனுடைய அருட்பொழிவு அவன் மீது இருந்த காரணத்தினால் தன் குமாரர்களின் மரணத்திற்காக தேவனின் கட்டளைப்படி அழவில்லை.
ஆனால் அதே வேளையில். பாவ நிவாரண பலியை சாப்பிடாமல் இருந்தது அவனுடைய துக்கத்தை உணர்த்துவதாக இருந்தது.
அந்த உணர்வை தேவன் புரிந்து கொண்டார்.
அந்த துக்க நேரத்தில் அவன் எப்படி சாப்பிட முடியும்.? சாப்பிடாமல் இருந்தது தேவனுடைய கட்டளையை மீறிய செயல் அல்ல. இயந்திரமாக(mechanically) எந்த ஒரு ஊழியத்தையும் செய்ய தேவன் அனுமதிப்பதில்லை.
நம்முடைய தேவன் உணர்வுகளின் தேவன். எனவேதான் மோசே இந்த பதிலைக் கேட்டு திருப்தி அடைந்து அமைதலாக இருந்தான்.
Our god is a God of human feeling.
எனவேதான் அவர் மனிதனாக இந்த உலகத்தில் அவதரித்தார்..