Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

பெலன், பலவீனம் Strength and weakness
உங்கள் சிந்தனைக்கு:
பெலன், பலவீனம்
Strength and weakness
மோசேயினுடைய பெலன் அவனுடைய தாழ்மை.எண்12:3
Meekness
தாவீதின் பெலன் அவனுடைய உத்தமம். Integrity
2 இராஜா12:9

ஆபிரகாமின் பெலன் அவனுடைய விசுவாசம் . ரோம4:21 Faith

பேதுருவின் சிறப்பு குணம் அவனுடைய தைரியம். Courage

காதேசிலே இஸ்ரவேல் ஜனங்கள் தண்ணீருக்காக கலகம் செய்த
போது ஆண்டவர் மோசேயை நோக்கி கோலை எடுத்துக் கொண்டு கன்மலை நோக்கி பேசச்சொன்னார்.
அதுவரைக்கும் இஸ்ரவேல் ஜனங்களின் கலகத்தை பொறுமையோடு சகித்த மோசே இந்த நிகழ்வில் பொறுமை இழந்து கன்மலையோடு பேசுவதற்கு பதிலாக அதை இரண்டு தடவை அடித்தான். விளைவு 40 வருடம் பொறுமையாக வழிநடத்தி கானானுக்கு செல்ல வேண்டிய இறுதி காலகட்டத்தில் அந்த வாய்ப்பை இழந்தான்.

அவனுடைய தாழ்மை என்னும் பெலன் அவனுக்கு கை கொடுக்கவில்லை.

ஆபிரகாம் விசுவாசத்தில் வல்லவனாக இருந்தாலும் இடையில் தன் மனைவி சொல் கேட்டு ஆகாரை திருமணம் செய்து கொண்டு தன் விசுவாசத்தில் பலவீனம் அடைந்தான்.

தாவீது தன் உத்தமத்தை பத்சேபாள் விஷயத்தில் இழந்தான்.

தைரியசாலியாக தோற்றம் அளித்த பேதுரு பெண்ணிடமும், வேலைக்காரியிடமும் பயந்து ஆண்டவரை மறுதலித்தான்.

சாத்தான் நம்முடைய பெலன் எங்கே இருக்கிறது அறிந்து அதிலே நம்மை தோல்வியைக்காண செய்வதில் வல்லவன்.

நாமும் நம்முடைய பெலத்தில் சார்ந்து இருக்கக் கூடாது. இதைத்தான் பவுல் இப்படி சொல்கிறார்

"கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்."

கொரிந்தியர் 12:9

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அனேக நேரங்களில் நம்முடைய பலவீனங்கள் மூலமாகத்தான் தேவன் மகிமைப்படுவார். நம்முடைய பெலன் பல வேலைகளில் நம்மை ஏமாற்றிவிடும்.
நம்முடைய பெலமாக கருதுகிற நம்முடைய உத்தமம், வைராக்கியம் , நேர்மை தைரியம் ,திறமைகள் நம்மை பல நேரங்களில் ஏமாற்றி விடும். தேவனுடைய கிருபையை சார்ந்து நம்முடைய பலவீனங்களில் நாம் மேன்மை பாராட்டும் பொழுது நாம் ஒருபோதும் வீழ்ந்து போவதில்லை. கர்த்தர் மகிமைப்படுவாராக.