Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

ஆரோனின்குமாரர்கள் மரித்ததற்கு என்ன காரணம்?
ஆரோனின்குமாரர்கள் மரித்ததற்கு என்ன காரணம்?
ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சன்னிதானத்தில் எரிந்து போனதற்கு என்ன காரணம்?
ஆசரிப்புக் கூடாரத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஆரோனின் மகன்களை கர்த்தருடைய சன்னிதானத்தில் இருந்து புறப்பட்ட நெருப்பு அவர்களை எரித்து போட்டது
லேவியராகமம் 10:1,2.
இதற்கு ஐந்து காரணங்களை மிகச்சிறந்த வேத அறிஞர் W.W.Wiersbe சுட்டிக்காட்டுகிறார்.
அதில் இரண்டு காரணங்களையும் அது உணர்த்தும் பாடங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

1.Wrong people
தங்களுக்கு சம்பந்தமில்லாத பணியில் தலையிட்டது.

அவர்கள் செய்த பணி என்பது பிரதான ஆசாரியனுக்கு மட்டும் உரியது யாத்30:7-10.
தன் தகப்பன் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் செய்தது.

ஆசாரியர்கள் பிரதான ஆசாரியர்களின் வேலையை செய்யக்கூடாது.

ஆவிக்குரிய வாழ்க்கையில் கூட நம்முடைய அழைப்பு, நமக்கு தேவன் அளித்த ஊழியம், பொறுப்பு இவைகளை தாண்டி மற்றவர்களுடைய பணியில் கர்த்தருடைய அனுமதி இல்லாமல் தலையிடுவது வேதத்தின் படி சரியல்ல.

ஆரோனுடைய மகன்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய எல்லையை மீறி, தேவன் அனுமதித்த கட்டளைகளை மீறி செயல்பட்டபோது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. உசியா ராஜா இதே மாதிரி தேவனின் சன்னிதானத்தில் தூபம் காட்டுவதற்காக நுழைந்த பொழுது குஷ்ட வியாதியினால் பாதிக்கப்பட்டான்.
தேவன் நமக்கு நியமிக்காத வேலையை நாமே எடுத்துக் கொள்வது சரியல்ல.

2.Wrong authority
ஆரோனுடைய மகன்கள் தேவனால் அனுமதிக்கப்படாத நெருப்பை‌ (unauthorised fire) தூப கிண்ணங்களில் போட்டு அதை தேவனுக்கு செலுத்தினார்கள்.

தாங்கள் செய்யப் போகிற காரியத்தை குறித்து தன் தகப்பனிடமோ, மோசேயிடமோ கலந்தாலோசிக்காமல் தேவனால் அனுமதிக்கப்படாத ஒரு காரியத்தை செயல்படுத்தினார்கள்.

நாம் கூட தேவனுடைய ஊழியமாக இருந்தாலும் கர்த்தருடைய அனுமதி இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது.
சிறிய ஊழியமோ பெரிய ஊழியமோ ஊழியக்காரர்களோ விசுவாசிகளோ யாராக இருந்தாலும் ஊழியத்தில் தேவனுடைய சித்தம் செய்ய வேண்டும். தேவனுடைய ஆளுகைக்குள் நாம் அடங்கி இருக்க வேண்டும்..
தேவன் நமக்கு கொடுக்காத அதிகாரத்தை நாம் கையில் எடுக்கக் கூடாது.
பவுல் சொல்லுகிற வார்த்தையை நாம் கவனிக்க வேண்டும்.
"நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.
2 கொரிந்தியர் 10:13.
தேவன் நமக்கு கொடுத்த வரையறையை மீறி நாம் எதையும் செய்யாதபடி இருக்க கர்த்தர் கிருபை தருவாராக.