Our faith should not be selective.
விசுவாசத்தினால் வராத எதுவும் பாவமே .ரோம14:23
ஆபேலின் விசுவாசம் ஆராதனையில் காணப்பட்டது. ஏனோக்கின் விசுவாசம் தேவனுடைய உறவில் வெளிப்பட்டது.
நோவாவின் விசுவாசமோ முழுமையான கீழ்ப்படிதலில் காணப்பட்டது.
விசுவாசம் என்பது நம்முடைய கஷ்ட நேரங்களில், ஆபத்துகளில், ஊழியக்காரியங்களில், நாம் நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரங்களில் ,நம்முடைய வறுமையில் மட்டும் வெளிப்படுகிற காரியமாக இருக்கக் கூடாது.
நம்முடைய விசுவாசம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் 'அ 'முதல் 'ஃ' வரை இருக்க வேண்டும்.
விசுவாசத்தினால் வராத எதுவும் பாவமே .ரோம14:23
அப்படி என்றால் என்ன அர்த்தம்? 100% தேவன் மீதும் தேவனுடைய வார்த்தையின் மீதும் நம்பிக்கை வைக்காமல் ,விசுவாசம் வைக்காமல் நாம் செய்கின்ற எந்த வேலையும், எந்த ஊழியமும், எந்த உறவு முறைகளும், எந்த நட்பும், நாம் எதிர்பார்க்கும் எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் பாவமே.
எப்படி அன்பு ஒரு முழு பரிமாணத்துடன் செயல்பட வேண்டுமோ அதுபோல் விசுவாச வாழ்க்கையும் ஒரு முழுமையான பரிமாணத்துடன் நம் வாழ்க்கையில் காணப்பட வேண்டும்.
Our faith should not be selective.