Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

காலம் தாழ்த்திய கீழ்படிதலும் அதன் விளைவுகளும்
காலம் தாழ்த்திய கீழ்படிதலும் அதன் விளைவுகளும்

காலம் தாழ்த்தி  கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்த யாக்கோபும் அதனால் அடைந்த அவமானங்களும் .

தேவன் யாக்கோபை நோக்கி பெத்தேலுக்கு  புறப்படு என்று சொன்ன போதும் அதை அவன் காலம் தாழ்த்தி நிறைவேற்றினான்.

ஆதி31:3ல்
சொல்லப்பட்ட கட்டளைக்கு பிறகு ஏறக்குறைய 10 ஆண்டுகள் கழித்து ஆதி 35:1ல் தேவன் மறுபடியும் சொன்ன போதுதான் நிறைவேற்றினான். ‌

தன்னுடைய குற்றங்களை பெருந்தன்மையாக மன்னித்த ஏசாவை ஏமாற்றி அவனுடைய ஊருக்கு செல்லாமல் இடமாறி சுக்கோத்துக்கும் ,சீகோம் பட்டணத்திற்கும் சென்று பத்து வருடங்கள் காலங்கடத்தினான்.
விளைவு அவன்  மகள் தீனாள் அவமானப்பட்டாள். அதன் விளைவாக சிமியோன், லேவி அந்த பட்டணத்தில் ஆண்களை வஞ்சகத்தினால் கொலை செய்த பழிக்கும் ஆளானார்கள்.
ஆதி34ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் யாக்கோபின் உடனடி கீழ்படியாமையினால் நடந்த காரியங்கள்.

சுக்கோத் ,சீகோம் இடங்களின் செழிப்பு யாக்கோபின் தரிசனத்தை மாற்றியது. 

தேவனுடைய கட்டளைக்கு உடனடியாக கீழ்ப்படியாமல் உடனடி தேவைகளை நிறைவேற்றும் படியாக  காலம் தாழ்த்தி பின்பு அவைகளினால் வரும் விளைவுகளை பார்த்து கீழ்ப்படிகிற காரியம் நம்முடைய வாழ்க்கையிலும் காணப்படுகிறது.

ஆனாலும் தேவன் யாக்கோபின் மீது கொண்டிருந்த அனாதிதீர்மானத்தை தேவன் நிறைவேற்றியது போல நம்முடைய வாழ்க்கையிலும் நிறைவேற்றுவாராக. அழைத்தவர் உண்மையுள்ளவர்.
தியானிக்க.
ஆதி28:3,33:17,18. மற்றும் 34 வது அதிகாரம்.