என் கருவில் பாதுகாத்த தேவன்
என் கருவில் பாதுகாத்த தேவன்
தாயின் கருவில் என் உறுப்புகளை உருவாக்கி ஒவ்வொன்றாக பக்குவமாக இணைத்து, இமைப்பொழுதும் தூங்காமல் என் உறுப்புகளை கண்காணித்து தேவையான வளர்ச்சிகளை கொடுத்து ஒரு சேதமும் வராமல் பாதுகாத்து முழு வடிவமாக தாயின் வயிற்றில் இருந்த என்னை வெளியில் கொண்டு வந்த என் தேவன் இந்த உலகிலும் என் சரீர பாதுகாப்பிற்கு அவர் போதுமானவர் .
கருவறையில் பாதுகாத்த தேவன் கல்லறை வரையில் சரீர பாதுகாப்புக்காக போதுமானவர்.
அவருடைய படைப்பின் கிரியையின் சிறந்த வெளிப்பாடு கருவறையில் நான் உருவாகி, வளர்ந்து, வெளியில் வந்த இந்த நிகழ்வு என்றால் அது மிகையாகாது.சங்கீ139:13-16