நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 11
✍️ உங்கள் சிந்தனைக்கு.
நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 11
Expository Commentary on the Book of Nehemiah
பொதுவாக கிறிஸ்தவ போதனையில் மூன்று முக்கியமான பிரசங்க வகைகள் பேசப்படுகின்றன:
1️⃣ Expository Preaching (விளக்கப்பிரசங்கம்)
வேதாகமப் பகுதியை வரிசையாக எடுத்துச் சொல்லி, அதன் உண்மையான அர்த்தத்தை விளக்குவது.
2️⃣ Topical Preaching (தலைப்புப் பிரசங்கம்)
ஒரு தலைப்பை (உதா: விசுவாசம், அன்பு) தேர்வு செய்து, அதற்கு தொடர்பான பல வசனங்களை இணைத்து போதிப்பது.
3️⃣ Textual Preaching (வசன அடிப்படையிலான பிரசங்கம்)
ஒரு குறிப்பிட்ட வசனத்தை எடுத்துக் கொண்டு, அதிலிருந்து முக்கியமான சில கருத்துகளை எடுத்துச் சொல்வது.
இன்றைய சபைகளில் Topical மற்றும் Textual வகை பிரசங்கங்களே அதிகமாக காணப்படுகின்றன. இந்த வகை பிரசங்கங்களும் தேவையற்றவை என்று சொல்ல முடியாது. ஆனால், அதைவிட ஆழமானதும் வலிமையானதும் Expository Preaching (விளக்கப்பிரசங்கம்) ஆகும்.
இந்த வகை பிரசங்கம், தேவனுடைய வார்த்தையை வரலாறு, கலாச்சாரம், அரசியல், சமூகப் பின்னணி போன்ற கோணங்களில் ஆராய்ந்து, எந்த சூழ்நிலையில், யாருக்காக, எதற்காக எழுதப்பட்டது என்பதை விளக்குகிறது. இப்படிப்பட்ட பிரசங்கங்கள் இன்றைக்கு மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வேதாகம வசனங்கள் இன்றைய வாழ்க்கையில் எவ்வாறு பொருந்துகின்றன, அவற்றை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தெளிவை Expository Preaching மூலம் தான் பெற முடியும்.
பிரசங்கிகள் வேதாகமத்தை ஆழமாக அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் விசுவாசிகளுக்கு தெளிவாக போதிக்க முடியும். மற்ற இரண்டு வகை பிரசங்கங்களை concordance போன்ற உதவிகளால் தயார் செய்ய முடியும். ஆனால், Expository Preaching செய்ய பலமான ஆயத்தமும், ஆழமான வேதாகம அறிவும், சமநிலையான சிந்தனையும் அவசியம்.
வேதாகமத்தில் முதல் Expository Preacher யார் என்றால் — எஸ்ரா.
அவர் தேவனுடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை வாசித்து, அதில் உள்ள அர்த்தத்தை மக்களுக்கு விளங்குமாறு தெளிவுபடுத்தினார்.
“அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை வாசித்து, அதிலுள்ள அர்த்தத்தை விளக்கி, மக்கள் புரிந்துகொள்ளும்படி செய்தார்கள்.” (நெகேமியா 8:8)
வேதத்தை வாசிப்பது ஒரு விஷயம்; மனப்பாடம் செய்வது வேறு ஒரு விஷயம்; ஆனால், வசனத்தின் ஆழமான அர்த்தத்தை உணர்ந்து படிப்பது முற்றிலும் வேறுபட்டது. இதற்கு தேவனுடைய வார்த்தையை நேசிக்கும் மனம் தேவை.
வேதாகமத்தை ஆராய்வதற்கு நாம் நேரம் செலவிட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் வழிநடத்த வேண்டும்.
“ஒரு வருடத்தில் மூன்று முறை வேதாகமத்தை வாசித்து முடித்தேன்” என்ற சாட்சிகள் மட்டும் போதாது.
ஒரு வசனம்—even ஒரு வார்த்தை—even அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் அதை கடந்து போகக் கூடாது. ஆராய்ந்து, தேடி, விளக்க உரைகள், ஆய்வு நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றின் உதவியுடன் உண்மையான அர்த்தத்தை கண்டறிய வேண்டும்.
அப்படி ஆய்வு செய்து அதின் அடிப்படையில் பிரசங்கிக்கப்படும் போது, விசுவாசிகள் தேவனுடைய வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வார்கள். இதையே எஸ்ரா செய்தார். அதன் விளைவாக மக்கள் மனந்திரும்பி, கண்ணீரோடு தேவனிடம் திரும்பினார்கள்.
இன்றைய விசுவாசிகள் இப்படிப்பட்ட பிரசங்கங்களை விரும்ப வேண்டும். இப்படிப்பட்ட பிரசங்கிகளை நேசித்து, ஆதரித்து, ஊக்குவித்து, அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
சபைகளில் இப்படிப்பட்ட “எஸ்ராக்கள்” எழும்ப வேண்டும். அதற்காக விசுவாசிகள் தீவிரமாக ஜெபிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், வேதாகமத்தை ஆழமாக தியானிக்கும் தலைமுறையை அடுத்த காலத்தில் காண முடியாமல் போகும் அபாயம் உள்ளது.
ஆகையால், இன்றே நாம் ஜெபிக்க வேண்டும் —
“கர்த்தாவே, எங்கள் சபைகளில் எஸ்ரா போன்ற விளக்கப்பிரசங்கிகளை எழுப்பும்.”