இந்த உலகத்தில் நம்முடைய கானான் எது?
உங்கள் சிந்தனைக்கு:
இந்த உலகத்தில் நம்முடைய கானான் எது?
பலர் நினைப்பதுபோல புதிய உடன்படிக்கை கிறிஸ்தவர்களுக்கு
கானான் என்பது பரலோகத்தின் நிழல் அல்ல என்று W.W.Wiersbe என்கிற வேத வல்லுனர் கூறுகிறார்.
"Canaan is not a picture of heaven. Rather Canaan is a picture of the inheritance God has planned for each of His children today, the work He wants us to do,the places He wants us to occupy "
இந்த உலகத்தில் நமக்கு தேவன் முன் குறித்து அழைக்கும் இடம்,
ஊழியம் இவைகளே இந்த உலகத்தில் நமக்கு கானான்.
இதை பரலோகத்திற்கான அடையாளம் என்று எடுத்துக்கொள்ள முடியாது.
இஸ்ரவேல் ஜனங்கள் கானானை அடைவதற்கு போராடியது போல விண்ணுலகில் எந்தப் போராட்டங்களும் கிடையாது.
இந்த உலகத்தில் நம்மை முன் குறித்து அழைத்த இடம்,ஊழியம் இவற்றை நாம் தேவனுக்கு கீழ்ப்படிந்து அவற்றை அடைய வேண்டும் தேவன் என்று விரும்புகிறார்.
ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு இலக்கை,ஒரு நோக்கத்தை,ஒரு அழைப்பை கொடுத்திருக்கிறார்.
அது ஒரு சபையாக ஒரு இயக்கமாக,ஒரு குழுவாக,அல்லது தனிப்பட்ட முறையில் இருக்கலாம். சரீரமாகிய சபையில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு முறையில் ஒவ்வொரு விதத்தில் வேலை உண்டு. எல்லா விசுவாசிகளும் ஒரே மாதிரி ஒரே வேலையை ஒரே விதத்தில் ஒரே இடத்தில் செய்ய முடியாது.
இந்த உலகத்தில் நமக்குரிய கானான் எது என்பதை அறிந்து புரிந்து அதை அடைய வேண்டும்.
இதுதான் புதிய ஏற்பாடு.
மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கு வேதம் கொடுக்கிற சுதந்திரம்இது.
சரீரத்தில் எல்லா உறுப்புகளும் வேலை செய்தால் தான் சரீரம் ஆரோக்கியமாக இருக்கும்.
இதை தலைவர்கள் சரியாகப் புரிந்து கொண்டு விசுவாசிகளை பயன்படுத்தாத வரை சபை தேவன் எதிர்பார்க்கும் வளர்ச்சியை ஒருக்காலும் பெற முடியாது.
ஆசரிப்பு கூடாரத்து பணிகளுக்கு ஆசாரியர்களும் லேவியர்களும் ஆகிய இரண்டு பேருமே தேவை.
அதுபோல சபையின் வளர்ச்சிக்கு இருவருமே தேவை.
இதை உணர மறுக்கும் தலைவர்களுக்காக ஜெபிப்பதை தவிர வேறு வழியில்லை.