Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Religious substitutes
உங்கள் சிந்தனைக்கு:
"Religious substitutes"
"எங்களுக்கு வானத்தில் இருந்து பொழியும் மன்னா தேவையில்லை .எங்களுக்கு தேவை இறைச்சி"
இதுதான் 400 ஆண்டுகால அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையான இஸ்ரவேல் மக்களுடைய விருப்பம். எகிப்திலே நடத்தப்பட்ட  கொடுமைகளிலிருந்து விடுதலையாக்கப்பட்ட அந்த தேவனுடைய மகிமையான விடுதலையை நன்றியோடு நினைவு கூறாமல், தேவன் கொடுத்த மன்னாவின் மீது திருப்தி அடையாமல் உடன் இருந்த யூதர் அல்லாத  அடிமைகளின் தூண்டுதலுக்கு உட்பட்டு அவர்கள் இறைச்சியை கேட்டார்கள்.
They wanted flesh as a substitute for heavenly manna.
தேவன் கொடுத்த காரியத்தில் திருப்தி அடையாமல் உலக விருப்பங்களை, ஆசைகளை இச்சைகளை நிறைவேற்ற விரும்பினார்கள்.
" They craved  substitutes from the world instead of desiring the   heavenly manna of the word  of God."W.W.Wiersbe
இன்றைக்கு தேவன் கொடுக்கும் ஆன்மீக நன்மைகளை, ஆன்மீக  ஆசீர்வாதங்களை, தேவன் அளித்த இரட்சிப்பை முக்கியப் படுத்தாமல் பெருங்கூட்ட மக்கள் ஆசைப்படும் செழிப்பு, வசதி, உலக மேன்மைகள் இவைகளை சபைகள் முக்கியப்படுத்தின காரணத்தினால்தான் சபைகள் திரைப்பட அரங்குகளாக மாறிவிட்டது.
கேளிக்கை கூடாரமாக மாறிவிட்டது.
தேவனுடைய வசனத்தை தியானிக்க வேண்டிய, விசுவாசிகளை வேத வசனத்தால் நிரப்ப வேண்டிய சபைகள் ஆடல் பாடல்களை ரசிக்கத் தொடங்கி விட்டார்கள்.
சபைத் தலைவர்கள் வேத வசனத்தை ஏதோ ஒரு மூலையில் வைத்து விட்டு விசுவாசிகளை மகிழ்விக்க தொடங்கி விட்டார்கள்.
பவுல் சொல்வது போல இன்று அநேக போதர்கள் வேறு விதமாக நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.
பிலி3:18
பவுல் சொல்வது போல இவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதிகள்.
இவர்கள் கூட்டத்தோடு ஒத்து போகும் மனப்பான்மை உடையவர்கள்.
The present leaders  impose 'religious substitutes"
தைரியமாக சத்தியத்தை பாதுகாக்க துணிவு இல்லாத கோழைகள்.
எனவே நாம் தேவன் கொடுக்கின்ற ஆவிக்குரிய நன்மைகளில் திருப்தி அடைந்து முறுமுறுக்காமல் இருப்போம் என்றால் அதுவே உண்மையான ஆவிக்குரிய வளர்ச்சி‌.
அன்றைக்கு சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள். அதுபோல உலகத்தில் இறுதி நாட்களில் முறுமுறுக்காமல் தேவன் கொடுத்த ஆன்மீக ஆசிர்வாதங்களில் திருப்தியாக இருந்து ஆவிக்குரிய ஓட்டத்தை ஓட நமக்கு தேவன் கிருபை செய்வாராக.
1 கொரிந்தியர் 10:10