Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஏசாவை வெறுத்தேன் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன ? ' அப்படியே, யாக்கோபைச்
உங்கள் சிந்தனைக்கு:

ஏசாவை வெறுத்தேன் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன ?

"அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் " என்பதின் உண்மையான அர்த்தம் என்ன? ரோம9:13

ராஜரிகம் அவர்கள் மொழிபெயர்ப்பில் " ஏசாவை விரும்பவில்லை" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வகையான வியாக்கியானங்கள் இருந்தாலும் முக்கியமான இரண்டு விளக்கங்களை மட்டும் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மையாகவே இந்தப் பகுதி பலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு பகுதி.

தேவன் ஏசாவை ஏன் வெறுக்க வேண்டும் ? அதுவும் பிறப்பதற்கு முன்பாகவே ஏன் ஏசாவை புறக்கணிக்க வேண்டும் ?அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு தேவன் ஏன் வரவேண்டும்.

நம் கடவுள் அநீதி உள்ளவரா? அப்படி இருக்க முடியாது.
ஏசாவை வெறுத்தேன் என்பதற்கு உண்மையான அர்த்தம் நான் ஏசாவை விட யாக்கோபை அதிகமாக சிநேகித்தேன் என்று அர்த்தம் கொள்ளலாம்.

ஏனென்றால் இது தேவனுடைய இறையாண்மையை சார்ந்தது

இருவருமே ஆதாமின் மீறுதலால் பிறந்தவர்கள். இருவருமே பாவத்தில் பிறந்தவர்கள்.
இருவரிடதிலும் எந்த தகுதியும்,
நியாயமும் கிடையாது.

அதனால் ஒருவனுடைய நீதியை புறக்கணித்து மற்றவனுக்கு அநீதி செய்திருந்தால் நாம் தேவன் மீது குற்றம் சுமத்த முடியும்.
ஆனால் இருவருமே பாவத்தில் பிறந்தவர்கள். ஒருவனிடத்தில் அதிகமாக அன்பு கூற தேவன் நினைக்கும் பொழுது அதை நாம் குறை கூற முடியாது.

ஏனென்றால் நம்மையும் கூட உலகத்தில் மேன்மையானவர்கள் எவ்வளவோ பேர் இருக்கும் பொழுது நம்மை மாத்திரம் தெரிந்து கொண்ட அந்த காரியம் தேவனுடைய அன்பையும் இறையாண்மையையும் சார்ந்ததது.
"தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். " என்கிற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளோடு இதை பொருத்தி பார்க்க வேண்டும்.

அதாவது இயேசு கிறிஸ்து தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளை வெறுக்க சொல்லவில்லை. அவர்களை விட தன்னை அதிகமாக நேசிக்க விரும்பினார்

இன்னொரு வியாக்கியானம்
அந்த நிகழ்வு உண்டான இடத்தில் இந்த வார்த்தைகள்( ஏசாவை வெறுத்தேன்) சொல்லப்படவில்லை. ஆதி 25:21-27.

ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மல்கியா எழுதிய தீர்க்கதரிசன புத்தகத்தில் தான் இந்த வார்த்தை சொல்லப்படுகிறது. மல்கி 1:2-,3.

இதற்கான காரணம் பற்றி பல வேத பண்டிதர்கள் எழுதும்போது ஏசா வழி வந்த சந்ததியினர் (ஏதோமியர்,மோவாபினர் ) இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக செய்த பல காரியங்களின் அடிப்படையில் இவ்வாறு கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது (எண்ணா24;17,18, எபி12:17 ஏசாயா11:,6,11,1,14).

எனவே தேவன் யாரையும் அடிப்படையில் வெறுக்க மாட்டார் என்பதுதான் உண்மையான சத்தியம்.