Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும்
உங்கள் சிந்தனைக்கு:

தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே .
ரோமர் 11:29

இதனுடைய உண்மையான அர்த்தம் என்ன?
அநேகர் இந்த ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு ஒருவனுக்கு தேவன் அளித்த கிருபைகள் ஒரு போதும் மாறாதது‌.

அவர்கள் எவ்வளவுதான் பின் மாற்றத்தில் விழுந்தாலும், பாவ வாழ்க்கை நடத்தினாலும், கர்த்தருக்கு தூரமாக இருந்தாலும், கர்த்தருடைய வழிகளை விட்டு விலகினாலும், கர்த்தருக்கு சித்தம் இல்லாத காரியங்களை செய்தாலும், கிறிஸ்துவின் அடிப்படை உபதேசத்தை மாற்றினாலும், அவர்களுக்கு கடவுள் முதலில் அளித்த கிருபைகளை, வரங்களை ஒருபோதும் எடுத்துக் கொள்வதில்லை என்று சாதிப்பார்கள். இது சரியா?
இது சரியல்ல

இது யூதர்களுக்கென்று கொடுக்கப்பட்ட  ஒரு வாக்குறுதி.
தேவனுடைய நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் தேவன் கொடுத்த ஒரு உறுதிமொழி.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற அவர்களுடைய முன்னோர்களுடன் தேவன் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடிப்படையிலானது.

மேலும் பல்வேறு தீர்க்கதரிசிகளுக்கு வேதத்தில்
பல்வேறு இடங்களில் யூதர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டது.

ரோம 11:25-32 வரை உள்ள வசனங்களை முழுமையாக படித்து பார்த்தால் இது புரியும்.

தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றாத ‌தனிப்பட்ட நபர்களுக்கோ ஊழியக்காரர்களுக்கோ கொடுக்கப்படுகிற உறுதிமொழி அல்ல.
ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு வாக்குறுதியை பொதுவுடமை படுத்தி விடக்கூடாது.