Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Doxology
உங்கள் சிந்தனைக்கு:

புதிய ஏற்பாட்டில் ஏறக்குறைய 30 இடங்களில் தேவனை புகழ்ந்து பாடும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இவைகளை Doxology என்றுசொல்வார்கள்.
இன்றைய தியானத்தில் என்னை கவர்ந்த ஒரு வார்த்தையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பாடல் ரோமாபுரி திருச்சபைக்கு பவுல் எழுதிய கடிதத்தில் 11:33-36ல் வருகிறது .

இதை இராஜரீகம் அவர்கள் மொழிபெயர்ப்பில் இப்படி மொழியாக்கம் பண்ணப்பட்டுள்ளது.

"கடவுளின் அருட்செல்வம் எத்தனை பெரிது!
அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை. அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை, அவருடைய வழிகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை."

"அவருடைய செயல்முறைகளோ விளங்கிக் கொள்ள முடியாதவை" (இலகு இலங்கை மொழிபெயர்ப்பு)


How unsearchable are his judgments and how inscrutable his ways!

என்னை சிந்திக்க தூண்டிய வசனம் "அவருடைய செயல்முறைகளோ விளங்கிக் கொள்ள முடியாது "என்கிற தேவனுடைய வார்த்தை தான்.

நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது அவருடைய வழிகளை நாம் ஆராய்ச்சி செய்ய முடியாது.

விளங்கிக் கொள்ள முடியாது. மனித ஞானத்தினால் அவைகளை அறிந்து கொள்ள முடியாது .
நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்தித்த தோல்விகள், அடைந்த ஏமாற்றங்கள், இழப்புகள், மனிதனுடைய புறக்கணிப்புகள், தலைவர்கள் ஏற்படுத்தின காயங்கள், இயக்கங்கள் ஏற்படுத்திய வலிகள், குடும்பங்கள் பரிசளித்த அநீதிகள், அவமானங்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவைகளுக்கெல்லாம் காரண காரியங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் நமக்கு பதில் கிடைக்காது .
இவைகள் தேவன் அனுமதித்து நடந்ததா ?அல்லது நம்முடைய பலவீனத்தால் ,தவறுகளால் அல்லது பாவங்களால் நடந்ததா என்று நம்மால் உறுதியிட்டு கூற முடியாது.
அவைகளை நிச்சயமாக மனித ஞானத்தை கொண்டுஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது.
அவருடைய செயல்முறைகளை, வழிமுறைகளை அநேக நேரங்களில் நாம் விளங்கிக் கொள்ள முடியாது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை.அவைகள் கர்த்தருடைய அனுமதி பெற்று நடக்கிறது என்கிற ஒரு நிச்சயம் நமக்கு இருக்கிறது. இத்தனை நிகழ்வுகள் நடந்தாலும் அவர் நம்மை கைவிடவில்லை என்கிற காரியம் "அவருடைய அருட் செல்வம் நமக்கு எவ்வளவு பயன்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இந்த வார்த்தைகளை எத்தனை தடவை படித்தாலும் அவைகள் நமக்கு புதுப்புது அர்த்தங்களை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

இப்படி புதிய ஏற்பாட்டில் உள்ள புகழ் பாடல்களை தியானிக்கும் போது நம்முடைய ஆராதனை புத்தியுள்ள ஆராதனையாக இருக்கும்.
அப்படிப்பட்ட கிருபைகளை கர்த்தர் நமக்கு தருவாராக.
கர்த்தர் மகிமைப்படுவாராக.