Lesson from Kadesh _Barnea
உங்கள் சிந்தனைக்கு:
ஒவ்வொரு விசுவாசியும் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய ஒரு இடம் காதேஸ்பர்னேயா .
இந்த இடத்தில் தான் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு மிகப்பெரிய தண்டனையை அளித்தார்.
இஸ்ரவேல் மக்களின் முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானானை அளிப்பதற்காக இந்த இடத்தில் 38 வருடங்கள் காலம் தாழ்த்தினார்.
சில வேதப் பண்டிதர்கள் சொல்லுகிறபடி 38 ஆண்டுகளில் 37 ஆண்டுகள் இந்த ஒரே இடத்தில் தங்கினதாக சொல்லப்படுகிறது .
இந்த இடத்தில் தான் ஏறக்குறைய 603548 பேரில் பெரும்பான்மையான இஸ்ரவேலர்கள் மரித்துப் போனார்கள்.
இந்த இடத்தில் தான் வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுக்கு விரோதமாக, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் மீட்டெடுத்த தேவனுக்கு விரோதமாக மிகப்பெரிய கலவரத்தை உருவாக்கினார்கள்.
காலேபுக்கும் யோசுவாவுக்கும் விரோதமாக கல் எறிய முன்வந்தார்கள்.
பத்து நபர்கள் சொல் பேச்சைக் கேட்டு பத்து தடவை சோதித்த ஆண்டவரை மேலும் சோதித்தார்கள்.
இந்த உலகில் முதன்முதல் Mob psychology என்று சொல்லக்கூடிய காரியம் மிகப்பெரிய அளவில் நடந்த இடம் இங்கு தான்.
காரணம் பத்து பேர் சொல்ல கேட்டு லட்சக்கணக்கான யூதர்கள் தேவனுக்கு விரோதமான கலகம் செய்தார்கள்.
இரவெல்லாம் முறுமுறுத்தார்கள்.
எகிப்துக்கு திரும்பி போக தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க முன்வந்தார்கள்.
இந்த இடத்தில் தான் தேவன் அவர்களுடைய பிதாக்களுக்கு வாக்குறுதி கொடுத்த கானானை இந்த
கலககார்களுக்கு தர மாட்டேன் என்று தீர்மானித்தார்.
இவ்வளவு பெரிய குழப்பத்திற்கு ஆரம்பம் எங்கே என்றால் இஸ்ரவேல் ஜனங்கள் தாங்கள் 400 ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுதலை ஆக்கின அந்த மாபெரும் காரியத்தை அவர்கள் அற்பமாக, அலட்சியமாக ,அதற்கு நன்றி உள்ள மனிதர்களாக காணப்படாமல் போன அந்த இடத்தில்தான்.
அந்த மாபெரும் செயலை மாத்திரம்அவர்கள் நன்றியோடு நினைத்து இருந்தால் இந்த காதேஸ்பர்னேயாவை சந்தித்திருக்க மாட்டார்கள்.
நாமும் கூட நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்படும் சோர்வுகளுக்கும், சந்தேகங்களுக்கும், பின் மாற்றங்களுக்கும், முறுமுறுப்புகளுக்கும் அடிப்படை காரணம் நமக்கு தேவன் அளித்த மிகப்பெரிய இரட்சிப்பை நாம் அவருடைய பிள்ளைகளான மாறின அந்த புண்ணிய காரியத்தை அலட்சியமாக, அதற்கு நன்றி இல்லாதவர்களாக, மிகப்பெரிய பாக்கியமாக கருதாமல் போனதே காரணம்.
விளைவு சில நேரங்களில் பின் மாற்றத்தை நோக்கி தேவனை மனதளவில் கலகம் செய்து அவரை விட்டு பிரிந்து விட நேரிடும் .
சில நேரங்களில் அவர் நமக்கு இந்த உலகத்தில் வைத்திருக்கும் சிறப்பான இடத்தை ஊழியத்தை, ஆசீர்வாதங்களை பெறாமல் செத்துப்போன செல்களாக அவருடைய சபையாகியசரீரத்தில் காணப்பட்டுபரலோகத்தில் எந்த ஆசீர்வாதத்தையும் பெற முடியாத நபர்களாக செல்லக்கூடும்
காதேஸ்பர்னேயா நம் வாழ்வில் நடைபெறாமல் இருக்க இவ்வளவு பெரிதான இரட்சிப்பை நாம் கண்ணும் கருத்துமாக பாதுகாத்தால் மிகப்பெரிய ஆவிக்குரிய நஷ்டங்களை முளையிலேயே கிள்ளிவிடலாம்.
கர்த்தர் மகிமைப்படுவாராக