Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

The most delightful book in the whole Bible
உங்கள் சிந்தனைக்கு:
The most delightful book in the whole Bible
எபிரேயருக்கு எழுதப் பட்ட நிருபம். சந்தோஷத்தை உண்டு பண்ணும் ஒரு நூல் என்று பலராலும் சொல்லப்படுகிறது.
இந்த நூலில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
1. It throws more light on Jesus Christ that no other part of the New Testament does.

இந்த கடிதம், புதிய ஏற்பாட்டில் உள்ள மற்ற கடிதங்களில் சொல்லப்படாத, விளக்கப்படாத, பல காரியங்களை இந்த புத்தகத்தில் நாம் படிக்கலாம்.

2.இந்த நூல் ஐந்தாவது நற்செய்தி நூல் என்றும் சொல்லப்படுகிறது.
ஏனென்றால் இந்த நூலில்தான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தற்போதைய ஊழியத்தைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இது வேறு எந்த புதிய ஏற்பாட்டு நூலிலும் சொல்லப்படவில்லை. its emphasis on Christ’s present work.

3 மேலும் இந்த நூல் புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டையும் இணைக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது.
பழைய ஏற்பாட்டில் மையப் பொருள்களாக உள்ள ஆசரிப்பு கூடாரம், பலிகள், தேவாலயம், ஆசாரியத்துவம் போன்றவைகளைப்பற்றி வேறு எந்த நிரூபத்திலும் சொல்லப்படாத கருத்துக்கள் இந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தக்கடிதம் வேதாகமத்தில் சேர்க்கப்படாமல் இருந்திருக்குமானால் இயேசு கிறிஸ்துவின் மகா பிரதான ஆசாரிய ஊழியத்தைப் பற்றிய ஒரு மிக தெளிவான புரிதல் சபைகளுக்கு கிடைத்திருக்காது.
4 மேலும் விசுவாச வீரர்களின் பட்டியலை பற்றிய மிக அழகான ஒரு விளக்கம் வேறு எந்த புதிய ஏற்பாட்டு கடிதங்களிலும், நூல்களிலும், கிடையாது.
இதை ஒரு மகிழ்ச்சியான புத்தகமாக நாம் படிக்கும்போது உண்மையாகவே நம் உள்ளத்தில் பழைய ஏற்பாட்டு பற்றிய பல புரிதல்கள் நமக்கு உண்டாகும்.
5 It was regarded as the best Greek in NT
இந்தக் கடிதம் மிக உயரிய கிரேக்க நடையில் எழுதப்பட்டது.
புதிய ஏற்பாட்டில் உள்ள மற்ற அனைத்து நூல்களும் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சாதாரண கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. ஆனால் கடிதம் மட்டும் மிக உயர்ந்த கிரேக்க (classical Language )நடையில் எழுதப்பட்டது என்று பலரும் சொல்லுகிறார்கள்.