Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எஸ்தர் புத்தகம் – வேதபாடம் 15
*உங்கள் சிந்தனைக்கு*

*எஸ்தர் புத்தகம் – வேதபாடம் 15*
.
*Expository commentary on the book of Esther.*
*பூரிம் பண்டிகை மோசே கட்டளையிடாத பண்டிகை, ஆனால் யூதர்கள்* *இந்நாள் வரை கடைபிடிக்கும் ஒரு பண்டிகை.*
எஸ்தர் புத்தகத்தில் இந்தப் பண்டிகை தலைமுறை தலைமுறையாக கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தவறாமல் கடை பிடிக்கப்பட வேண்டும் என்றும் யூதர்கள் தீர்மானித்தார்கள்.

இன்றும் உலகம் *முழுவதும் உள்ள யூதர்கள் ஆதார் மாதம் 14-ஆம் தேதி பூரிம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.*

"பூர்" (Pur) என்ற பாரசீக வார்த்தைக்கு "சீட்டு" (lot) என்று பொருள்.
ஆமான் யூதர்களை அழிக்க ஏற்ற நாளைத் தேர்ந்தெடுக்க சீட்டு போட்டான். ஆனால் தேவன் அந்தத் திட்டத்தை முறியடித்தார். அதனால் அந்த நிகழ்வை நினைவுகூர "பூரிம்" (Purim = Lots) என்று பெயரிட்டனர் (எஸ்தர் 9:24-26
கடவுள் மோசே மூலம் இஸ்ரவேல் ஜனங்கள் பின்பற்றும்படியாக சொன்ன
தேவனால் கட்டளையிடப்பட்ட பண்டிகைகள்
1.பஸ்கா (Passover)
2.பெந்தெகொஸ்தே (Pentecost)
3.கூடாரப்பண்டிகை (Tabernacle)
*ஆனால் இந்த பூரீம் பண்டிகையை யூதர்கள் இந்நாள் வரைக்கும் கொண்டாடி வருகின்றனர்‌*
**அதற்கான காரணம் என்ன?*
தங்களைக் கூண்டோடு அழிக்கும் படியாக ஆமான் சதி செய்து அதற்கென்று ஒரு நாளை சீட்டு மூலமாக (Lot) முடிவு செய்தான்.. அதற்கான ஆணையை செயல்படுத்தும்படியாக அந்த உத்தரவு தேசம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.
இதை நிமித்தமாக ‌ அந்தப் பேரரசின் தலைநகரம் சூசான் கலங்கியது. யூதர்கள் மத்தியில் கலக்கமும் துக்கமும் அழுகையும் புலம்பலும் உண்டாயிற்று.
*பெர்சிய சாம்ராஜ்யத்தில் ஒரு நடைமுறை உண்டு. அரசன் பிறப்பித்து ஒரு ஆணையை மறுபரிசீலனை செய்ய அதை ரத்து செய்ய அந்த அரசனுக்கே அதிகாரம் கிடையாது என்பது தான்.*
எனவே யூத ஜனங்கள் மரணப் பிடியில் இருந்தார்கள்..
அதற்குப் பிறகு தேவன் தலையிட்டு எஸ்தர் மூலமாக ஒரு மிகப்பெரிய விடுதலையை யூதர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஒரு புதிய ஆணையை அகாஸ்வேரு அரசன் பிறப்பித்தான்.
உடனடியாக மூன்றாம் மாதமாகிய சீவான் மாதம் இருபத்தி மூன்றாம் நாளிலே அரச செயலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் யூதர்களுக்கும், அரச பிரதிநிதிகளுக்கும், ஆளுநர்களுக்கும், இந்திய தேசம் முதல் எத்தியோப்பியாவரை பரந்திருந்த நூற்று இருபத்தேழு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் மொர்தெகாயின் உத்தரவுகளையெல்லாம் எழுதினார்கள். இந்த உத்தரவுகள் ஒவ்வொரு நாடுகளின் எழுத்திலும், ஒவ்வொரு மக்களின் மொழியிலும் எழுதப்பட்டன. அத்துடன் யூதர்களுக்கும் அவர்களுடைய சொந்த எழுத்திலும், மொழியிலும் எழுதப்பட்டன.
அரசனின் கட்டளை, எல்லாப் பட்டணங்களிலுமிருந்த யூதர்கள் ஒன்றாய்க் கூடி தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையை வழங்கியது. அதன்படி யூதர்கள் தங்கள் பெண்களையும், பிள்ளைகளையும் தாக்கக்கூடிய எந்த நாட்டையாவது, மாகாணத்தையாவது சேர்ந்த எந்தவொரு ஆயுதம் தாங்கிய படையையும், அழிக்கவும், கொல்லவும், நாசப்படுத்தவும் உரிமை வழங்கியது. அத்துடன் தங்கள் பகைவரின் சொத்தைக் கொள்ளையிடவும் உரிமை வழங்கியது.
எஸ்தர் 8:9, 11.
*ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஆணை ரத்து என்று சொல்லப்படாமல்* *யூதர்களை பாதுகாக்க அவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது.*

அகாஸ்வேரு அரசனின் எல்லா மாகாணங்களிலும் யூதர்கள் இதைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாள், ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாம் நாளாயிருந்தது.
*இந்த மகத்தான தேவனுடைய காரியத்தை ஜனங்கள் நினைவுகூறும்படியாக*
*யூதர்கள் ஆதார் மாதம் 14-ஆம் தேதி பூரிம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் இந்நாள் வரைக்கும்கொண்டாடுகின்றனர்‌*
.
. *இயேசு பூமியில் வாழ்ந்த காலத்திலும் யூதர்கள் இந்த பண்டிகையை அனுசரித்தனர்.* *வேதாகமத்தில் இயேசு பூரிம் பண்டிகையை எதிர்த்ததாக எந்த பதிவும் இல்லை.*

*பூரிம் பண்டிகை கிறிஸ்தவர்களுக்கு சொல்லும் முக்கிய செய்தி:*
" *தேவன் காணப்படாவிட்டாலும் செயல்படுகிறார்* ; *தம் ஜனங்களை மறப்பதில்லை; மனிதரின் தீய திட்டங்களைத்* *தமது மகிமைக்காக மாற்ற வல்லவர்."*
அதனால் பூரிம் பண்டிகை, தேவனுடைய பரிபாலனம் (Providence), பாதுகாப்பு (Protection), மற்றும் வாக்குத்தத்த உண்மைத்தன்மை (Faithfulness) ஆகியவற்றை நினைவுபடுத்தும் ஒரு வலிமையான சாட்சியாக காணப்படுகின்றது.

*இத்துடன் எஸ்தர் ** *புத்தகத்தின் உடைய விளக்க உரையை முடிகிறது* .*
அடுத்தது யோபுவின் புத்தகத்தைப் பற்றிய வேத பாடங்கள் அடுத்த பதிவில் தியானிக்கலாம் ‌
*இந்த எஸ்தர் புத்தகத்தைப் பற்றிய‌ வேத பாடங்கள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்றால் உங்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால் உங்கள் கருத்துக்களை அடியேனுக்கு தெரியப்படுத்தவும் அதில் கர்த்தர்* பிரியப்படுகிறார்