Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யோபுவின் புத்தகம் – வேதப் பாடம் 20
*உங்கள் சிந்தனைக்கு.*

*யோபுவின் புத்தகம் – வேதப் பாடம் 20*

" *என் மீட்பர் உயிரோடிருக்கிறார்"*

கடவுளுடைய மீட்பின் திட்டம் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட இடம் ஏதேன் தோட்டம். ஆதியாகமம் 3:15-ல், உலகத்தின் மீட்பர் பெண்ணின் வித்தாக வந்து சாத்தானின் தலையை நசுக்குவார் என்று தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், வேதாகமத்தில் முதலில் எழுதப்பட்ட புத்தகமாக யோபுவின் புத்தகம் கருதப்பட்டால், அதில் யோபு முதன்முதலாக இறுதிக் காலத்தில் வெளிப்படப்போகும் மீட்பரை, அதாவது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தனது விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். இது மிகவும் ஆச்சரியமான உண்மையாகும்.

ஒரே நாளில் யோபு தன்னுடைய ஆடுகள், மாடுகள், எருதுகள், ஒட்டகங்கள் ஆகிய அனைத்தையும் இழந்தான். அதோடு தன் பிள்ளைகளையும் இழந்தான். பின்னர் அவனுடைய சரீரம் முழுவதும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டது. இத்தகைய துயரத்தின் நடுவில், தனக்கும் கடவுளுக்கும் இடையில் நின்று *பேசக்கூடிய ஒருவரையும்* பின் வழக்காடக்கூடிய ஒரு *மத்தியஸ்தரை* ஏங்கினான்.

*இறுதியில், மரணத்திற்குப் பிறகும் தன்னை மீட்பர் சந்திப்பார்* என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறான்.

«" *என் மீட்பர் உயிரோடிருக்கிறார்* என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் அழிந்துபோனபின்பும், நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்."
(யோபு 19:25–26)»

*இந்த வார்த்தைகள் யோபுவின் விசுவாசத்தின் உச்சநிலையை வெளிப்படுத்துகின்றன* .

இந்த உலகத்தில் தான் இழந்த எதுவும் திரும்பக் கிடைக்காவிட்டாலும், மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது; புதிய சரீரத்தோடு இறுதி நாட்களில் வெளிப்படப்போகும் மீட்பரை நான் சந்திப்பேன் என்ற ஆழமான விசுவாசமே இந்த அறிக்கையின் அடிப்படை.

*யோபு புத்தகத்தின் மிகச் சிறப்பான பகுதிகளில் இதுவே* *உச்சமானதாகும். வேதாகமம் முழுமையாக எழுதப்படாத* *காலத்தில், தேவனை நேரடியாகத் தரிசிக்காத ஒரு மனிதன் இவ்வளவு ஆழமான விசுவாசத்தை வெளிப்படுத்தியது வியப்புக்குரியது.*

*யோபுவின் ஒவ்வொரு அறிக்கையும் கவனிக்கத்தக்கது* :

1. *மீட்பர் ஒருவர் இருக்கிறார்.*
*2. *அவர் என் மீட்பர்.*
3. *அவரை நான் அறிந்திருக்கிறேன்.*
4. *அவரை நான் பார்ப்பேன்.*
5. *அவர் இறுதி நாட்களில் பூமியின்மேல் நிற்பார்.*
6. *அவரை என் மாம்சத்தில் பார்ப்பேன்* .
7. *என் கண்களால் அவரைக் காண்பேன்.*

கொடிய பாடுகளும் சித்திரவதைகளும் நிறைந்த சூழ்நிலையிலும், யோபு உச்சமான விசுவாசத்தை வெளிப்படுத்துகிறான்.

இந்த வசனம்:

- சரீர மீட்பை வலியுறுத்துகிறது.
- இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நோக்கிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
- மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது.

*ஆதியாகமம் 3:15 – கடவுள் மீட்பின் திட்டத்தை முதன்முதலாக வெளிப்படுத்திய* *வசனம்* .

*யோபு 19:25–26 – மனிதன் தனது மீட்பரைப் பற்றிய விசுவாசத்தை மிகத்* *தெளிவாக வெளிப்படுத்திய மகத்தான அறிக்கை.*

*அதுமட்டுமல்ல, "மீட்பர்" என்ற பொருளில் (Go'el) இந்தச் சொல் வேதாகமத்தில் முதன்முதலாக குறிப்பிடப்படும் முக்கியமான இடமும்* *இதுவாகும்* .

*இதில் இன்னொரு ஆச்சரியமான உண்மை உள்ளது. வேதாகமத்தின் முதல் புத்தகமாகக் கருதப்படும் நூலிலேயே மீட்பரைப் பற்றிய நம்பிக்கை ஒலிக்கிறது; வேதாகமத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷத்தில், அதே மீட்பர்* *வெற்றியுள்ள ராஜாவாக வெளிப்படுகிறார்* . *இதுவே முழு வேதாகமத்தின் மையச் செய்தி — மீட்பர் இயேசு கிறிஸ்து.*

இங்கே "மீட்பர்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெயச் சொல் "கோஏல்" (גֹּאֵל – Go'el) ஆகும்.

இதன் பொருள்:

- மீட்பவர் (Redeemer)
- உறவினர்-மீட்பர் (Kinsman-Redeemer)
- விடுவிப்பவர்
- உரிமையை மீட்டுத் தருபவர்
- பழியைத் தீர்ப்பவர்

அதாவது, நெருங்கிய உறவினராக இருந்து நான் இழந்ததை மீட்டுத் தருபவர் என்பதே இதன் அடிப்படை அர்த்தமாகும்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு போவாஸ். அவர் ரூத்தின் Kinsman-Redeemer ஆக இருந்து, ரூத்தையும் நகோமியையும் மீட்டு, அவர்களுடைய குடும்ப உரிமையை நிலைநாட்டினார்.

எனவே, யோபு "என் மீட்பர் உயிரோடிருக்கிறார்" என்று கூறும்போது, தன்னுடைய வழக்கை ஏற்று, தன்னை நியாயப்படுத்தி, தன்னை மீட்கக்கூடிய நெருங்கிய உறவினர்-மீட்பரை எதிர்பார்க்கிறார்.

புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில், இந்த உண்மை முழுமையாக இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. அவர் மனிதனாக அவதரித்து நம் உறவினராக வந்து, தம் இரத்தத்தினால் நம்மை மீட்ட உண்மையான Kinsman-Redeemer ஆனார்.