*யோபுவின் புத்தகம் — வேதபாடம் 42
*உங்கள் சிந்தனைக்கு*
*யோபுவின் புத்தகம் — வேதபாடம் 42*
இந்தப் புத்தகத்தின் 38:39 முதல் 39:30 வரையுள்ள வசனங்களில், கடவுள் தான் படைத்த படைப்புகள் மீது எவ்வளவு அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை யோபுவுக்கு உணர்த்துகிறார்.
மிருகங்களை கடவுள் எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து, பராமரித்து வருகிறார் என்பதைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
*இந்தப் பதிவில், ஐந்து பறவைகளைக் குறிப்பிட்டு, அவற்றை ஒப்பிட்டு, அவற்றின் மூலம் சில* *ஆவிக்குரிய உண்மைகளை கடவுள் எப்படி நமக்கு விளக்குகிறார் என்பதைப்* *பார்க்கலாம்* .
1. *காகம் (Raven) — யோபு 38:41*
தேவன் காகத்திற்கும் அதன் குஞ்சுகளுக்கும் உணவு அளிப்பதைக் குறிப்பிடுகிறார். காகம் அலைந்து திரிந்து உணவைத் தேடிப் பறக்கும் திறன் பெற்றிருந்தாலும், அதன் குஞ்சுகளுக்கு உணவை அளிப்பவர் கடவுளே.
இங்கே காகத்தின் பறக்கும் திறனைவிட, தேவனுடைய பராமரிப்பே முக்கிய கருத்தாக உள்ளது.
2. *நெருப்புக்கோழி / தீக்கோழி (* Ostrich) — யோபு 39:13–18
நெருப்புக்கோழி பறக்க முடியாத பறவை. அதற்கு அழகான இறகுகள் இருந்தாலும், மற்ற சில பறவைகளைப் போல பறக்கும் திறன் அதற்கு இல்லை. மேலும், அது தன் குஞ்சுகளைக் கவனிக்காமல் புறக்கணிக்கும் தன்மையுடையதாகவும் இந்தப் பகுதியில் சித்தரிக்கப்படுகிறது.
இங்கே பறக்கும் திறனின்மையும் அதன் நடத்தையும் ஒரு முரண்நகையாக (irony) சித்தரிக்கப்படுகிறது — அழகு இருந்தும், அதற்கேற்ற ஞானம் இல்லாத பலம்.
3. *நாரை (Stork) —* *யோபு 39:13*
நாரை நீண்ட தூர இடம்பெயர்வுக்குப் (migration) பெயர் பெற்றது. அது வலிமையான, நிலையான பறத்தலைக் கொண்டது.
4. *பருந்து (Hawk) — யோபு 39:26*
பருந்து உயரமாகப் பறக்கக்கூடியது.
பருவகால இடம்பெயர்வையும் (seasonal migration), அதற்கு உள்ளார்ந்த உள்ளுணர்வையும் (instinct) நாம் காண முடிகிறது. மனிதனால் கற்றுக்கொடுக்கப்படாத, தேவனால் வழங்கப்பட்ட திசைகாட்டும் அறிவை அது பெற்றிருக்கிறது.
5. *கழுகு (Eagle) — யோபு* 39:27–30
கழுகு “உயரத்தில் கூடு கட்டி”, உயரமான பாறைகளில் வாழ்ந்து, கூரிய பார்வையுடன் தூரத்திலிருந்தே இரையைக் கண்டு, பாய்ந்து பிடிக்கும் திறன் கொண்டது.
இதன் பறத்தல் — உயரம், கட்டுப்பாடு, துல்லியம் ஆகியவற்றில் சிறப்பானது.
காகம் — உணவுக்காகக் கடவுளைச் சார்ந்து இருக்கிறது.
நெருப்புக்கோழி — தனித்திறமையோடு காணப்படுகிறது.
நாரை — வேறுபட்ட திறனோடு காணப்படுகிறது.
பருந்து — உயரப் பறக்கும் திறமை கொண்டது.
கழுகு — கூர்மையான பார்வையைக் கொண்டது.
*தேவன் எல்லாப் பறவைகளையும் ஒரே மாதிரியாகப் படைக்கவில்லை* ; *ஆனால் ஒவ்வொன்றுக்கும் அதற்கேற்ற திறமையையும், வாழ்வதற்குத் தேவையான ஞானத்தையும் கொடுத்திருக்கிறார்* .
*இதுதான் யோபுவுக்கு தேவன் கொடுக்கும் பெரிய பாடம்:*
*“நீ புரிந்துகொள்ளாத விதத்தில் நான் செயல்படுகிறேன் என்பதற்காக, நான் என் படைப்பை கவனிக்கவில்லை என்று அர்த்தமல்ல.”*
*அதேபோல்தான் கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்திருக்கிறார்* .
“ *மரம் வைத்தவன் தண்ணீர் பாய்ச்சுவான்” என்று ஒரு சொல் உண்டு* . *அதுபோல, நம்மைப் படைத்தவர் நாம் வாழ்வதற்கு* *ஏற்ற பல்வேறு திறமைகளை நமக்கு அளித்திருக்கிறார்.*
*ஒருவருக்கு* *இருக்கும் திறமை மற்றொருவருக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு திறமைதான் உயர்ந்தது என்று நாம் தம்பட்டம் அடித்துக்கொள்ளக் கூடாது.*
*ஒவ்வொருவரும் தேவனுடைய பார்வையில் சிறப்பானவர்கள்* .
எனவே, தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை மற்றவர்களோடு ஒப்பிடாமல், அவற்றை உணர்ந்து, அவற்றை அவருடைய பணிக்காகப் பயன்படுத்துவோம்.
கடவுளுடைய பணியில்,